இந்தியாவே காத்துகிடக்கும் கிரெட்டா ஃபேஸ்ஃலிப்ட் கார் பற்றிய ரகசியம் வெளியானது! இதெல்லாம் கண்டிப்பா தெரியனும்!
2024 ஹுண்டாய் கிரெட்டா ஃபேஸ்ஃலிப்ட் கார் வரும் 14ஆம் தேதி விற்பனைக்கு அறிமுகமாக உள்ள நிலையில் தற்போது இந்த கார் குறித்த வேரியன்ட், கலர் மற்றும் இன்ஜின் பெர்ஃபார்மென்ஸ் குறித்த விபரங்கள் எல்லாம் வெளியாகி உள்ளது. இதன்படி இந்த கார் 7 விதமான வேரியன்ட்களில் விற்பனைக்கு வரவுள்ளது. இது குறித்த விரிவான அனைத்து விவரங்களையும் காணலாம் வாருங்கள்.
ஹூண்டாய் நிறுவனத்தின் சிறப்பாக விற்பனையாகி வரும் கார்களில் ஒன்றாக இருக்கிறது. மக்கள் மத்தியில் நல்ல மவுசு பெற்று வரும் நிலையில் இந்த ஹூண்டாய் கிரெக்டா கார் நீண்ட ஆண்டுகளாக சிறப்பாக விற்பனையாகி வரும் காராக இருக்கிறது. இந்த காரை ஹூண்டாய் நிறுவனம் அப்டேட் செய்து வெளியிட முடிவு செய்துள்ளது. இதன்படி 2024 ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் கார் தற்போது அறிமுகத்திற்கு தயாராகி உள்ளது.
வரும் 16ஆம் தேதி இந்த கார் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாக உள்ளது. இந்நிலையில் இந்த கார் குறித்த வேரியன்ட் கலர் மற்றும் இன்ஜின் பெர்ஃபார்மன்ஸ் உள்ளிட்ட விபரங்கள் எல்லாம் தற்போது வெளியாகி உள்ளன. இதன்படி இந்த கார் மொத்தம் 7 விதமான வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது. மேலும் மூன்று விதமான இன்ஜின் ஆப்ஷன்கள் இந்த காரில் இடம் பெற்றுள்ளன.
அதன்படி இந்த கார் 1.5லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டு 115 பிஎஸ் பவரையும் 144 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்ட இன்ஜின் ஆகவும், மற்றொரு ஆப்ஷனாக 1.5லிட்டர் டீசல் இன்ஜின் 116 பிஎஸ் பவர் மற்றும் 250 என்எம் டார்க் திறனுடன் பொருத்தப்பட்ட இன்ஜின் ஆகவும் 1.5லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் 160 பிஎஸ் பவர் 253 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் இன்ஜினாகவும் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது 7 விதமான வேரியன்ட்களில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இ, இஎக்ஸ், எஸ், எஸ் எஸ்(ஓ), எஸ் எக்ஸ் டெக் மற்றும் எக்ஸ் எக்ஸ் (ஓ) ஆகிய வேரியன்டுகளில் இந்த கார் விற்பனைக்கு வருகிறது. மேலும் இந்த காரின் கலரை பொறுத்தவரை மொத்தம் 6 விதமான கலர் மற்றும் ஒரு டூயல் டோன் கலர் ஆப்ஷன் உடன் இந்த கார் விற்பனைக்கு வருகிறது.
அதன்படி ரோபஸ்ட் எமரால்டு பியர்ல், பெரி ரெட், ரேஞ்சர் காக்கி , அபியாஷ் பிளாக், அட்லஸ் ஒயிட், டைட்டான் கிரே ஆகிய சிங்கிள் டோன் கலர் ஆப்ஷனும் அட்லஸ் ஒயிட் உடன் கருப்பு நிற ரூஃப் கொண்ட டூயல் டோன் கலர் ஆப்ஷனும் இந்த காரில் உள்ள கலர் ஆப்ஷன்களாக வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் கியர்பாக்ஸை பொருத்தவரை மேனுவல் சிவிடி, டார்க் கன்வெர்ட்டர் மற்றும் டிசிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் உள்ளன.
இதில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மேனுவல் கியர்பாக்ஸுடன் பொருத்தப்பட்ட வெர்ஷன் அனைத்து வேரியன்ட்களிலும் கிடைக்கிறது. சிவிடி கியர் பாக்ஸ் எஸ் (ஓ) மற்றும் எஸ் எக்ஸ் டெக், எஸ் எக்ஸ் (ஓ) ஆகிய வேரியன்ட் மட்டும் கிடைக்கிறது 1.5 லிட்டர் டீசல் மேனுவல் செட்டப் எஸ் எக்ஸ் வேரியன்ட்களில் கிடைக்கிறது. 1.5 லிட்டர் டீசல் ஆட்டோமேட்டிக் எஸ் (ஓ) மற்றும் எஸ்எக்ஸ் (ஓ) ஆகிய வேரியன்ட்களில் மட்டும் கிடைக்கிறது.
புதிய தலைமுறை கிரெட்டா காரில் மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் உடன் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை வழங்குகிறது. கியா செல்டோஸ் ஐஎம்டி ஆப்ஷனுடன் வருகிறது. இதன் முன் பக்கம் அதன் வடிவமைப்பு மாற்றப்பட்டு டிசைன் செய்யப்பட்டுள்ளது. பின்பக்கமும் அதே போல பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய அலாய் வீல்கள் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது.
முக்கியமாக இந்த காரில் புதிய எல்இடி ஹெட்லைட், புதிய கிரில் அமைப்பு, அப்டேட் செய்யப்பட்ட பம்பர்கள், புதிய எல்இடி டிஆர்எல் மற்றும் புதிய எல்இடி டெய்ல்லைட் ஆகிய பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த காரில் லெவல்2 அடாஸ் தொழில்நுட்பம் இருக்கிறது. தொழில்நுட்பத்தை பொருத்தவரை 360டிகிரி கேமரா, டூயல்ஸோன் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், ரிவைஸ் செய்யப்பட்ட சென்டர் கண்சோல், புதியடச் கண்ட்ரோல்கள், புதிய ஏசி வென்ட், அம்பியன்ட்லைட்டிங் ஆகிய இந்த காரில் உள்ளன.