இந்தியாவின் மிக நீளமான கேபிள் பாலம் – மோடியால் திறந்து வைப்பு
இந்தியாவின் மிக நீளமான கேபிள் ஸ்டேட் பாலமான சுதர்சன் சேது பாலம் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இப்பாலமானது 25.2.2024 இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்திய மதிப்பில் 979 கோடி செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுமார் 2.32 கி.மீ நீளமுள்ள இந்த பாலம் தான் இந்தியாவின் மிக நீளமான கேபிள் பாலம் என தெரிவிக்கப்படுகின்றது
புகழ்பெற்ற துவாரகா கோயில்
குஜராத்தில் உள்ள துறைமுக நகரமான ஓகாவையும் பயத் துவாரகா தீவையும் இணைக்கும் பாலத்தின் மொத்த நீளம் 2.3 கி.மீ. பயட் துவாரகா தீவில் உள்ள கிருஷ்ணருக்கு கட்டப்பட்ட புகழ்பெற்ற துவாரகா கோயிலுக்கு செல்வதற்கு வசதியாக இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.
சுதர்சன் சேது ஒரு தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது, இதில் ஸ்ரீமத் பகவத் கீதையின் வசனங்கள் மற்றும் இருபுறமும் பகவான் கிருஷ்ணரின் படங்களால் அலங்கரிக்கப்பட்ட நடைபாதையை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.