INDvsENG: அனில் கும்ப்ளே ஹர்பஜன் சிங் சாதனையை ஓரம் கட்டிய அஸ்வின் – ஜடேஜா!
இந்திய கிரிக்கெட் அணியில் சிறந்த சுழற்பந்துவீச்சாளர் என்றாலே ரவீந்திர ஜடேஜா – ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டு பேர் என பல கிரிக்கெட் வீரர்களும் கூறுவது உண்டு. இவர்கள் இருவரும் ஒன்றாக ஒரே டெஸ்ட் போட்டியில் விளையாடிஇருவரும் இணைந்து 499 விக்கெட்களை எடுத்து இருந்தார்கள்.
இந்த நிலையில், இன்று இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்களையும், ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தி உள்ளனர். இருவரும் இணைந்து இந்த போட்டியில் 3 விக்கெட் எடுத்த காரணத்தால் இவர்கள் ஒன்றாக இணைந்து டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்திய விக்கெட்களின் எண்ணிக்கை உயர்ந்தது.
அதன்படி, இந்த போட்டிக்கு முன்னதாக 499 விக்கெட்களை இருவரும் இணைந்து டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்தி இருந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிராக அவர்கள் இன்று எடுத்த 3 விக்கெட்களும் சேர்த்து 501-ஆக மாறியது. இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் மட்டும் அதிகம் விக்கெட்கள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் என்ற சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஜோடி படைத்துள்ளது.
அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த இந்திய பந்துவீச்சாளர்கள் ஜோடி
502* – அஷ்வின் மற்றும் ஜடேஜா
501 – கும்ப்ளே மற்றும் ஹர்பஜன்
474 – ஹர்பஜன் மற்றும் ஜாகீர்
431 – உமேஷ் மற்றும் அஷ்வின்
412 – கும்ப்ளே மற்றும் ஸ்ரீநாத்