சிவபெருமான் பற்றிய தகவல்கள் ஒர் பார்வை..! ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் சிவன் மீது பாடியவர்..
1.சிவசின்னங்களாக போற்றப்படுபவை….. திருநீறு, ருத்ராட்சம், நமசிவாய மந்திரம்
2. சிவனுக்கு அன்னாபிஷேகம் நடக்கும் காலம்….
ஐப்பசி பவுர்ணமி
3. சிவன் யோகியாக இருந்து ஞானத்தை அருளும் கோலம்…..
தட்சிணாமூர்த்தி
4. ஆன்மாவைக் குறிக்கும் சிவன் எங்கிருக்கிறார்?
திருப்பெருந்துறை(ஆவுடையார்கோயில்)
5. காலனை உதைத்த காலசம்ஹார மூர்த்தியாக ஈசன் அருளும் தலம்…..
திருக்கடையூர்
6. ஞானசம்பந்தரைக் காண சிவன் நந்தியை விலகச் சொன்ன தலம்……
பட்டீஸ்வரம்
7. ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் சிவன் மீது பாடியவர்………
திருமூலர்
8. முக்திவாசல் என்று போற்றப்படும் திருத்தலம்…….
திருவெண்காடு (நவக்கிரக புதன் ஸ்தலம்,நாகப்பட்டினம் மாவட்டம்)
9. ஐப்பசியில் காவிரியில் சிவபார்வதி நீராடுவது………..
துலாஸ்நானம்
10. ஐப்பசி கடைசியன்று மயிலாடுதுறையில் நீராடுவது………
கடைமுகஸ்நானம்
11.சிவனுக்கு மாடக்கோயில் கட்டிய மன்னன்…..
கோச்செங்கட்சோழன்.
12. கூத்தப்பன் என்று போற்றப்படும் இறைவன்….
நடராஜர்(கூத்து என்றால் நடனம்)
13. தரிசிக்க முக்தி என்ற சிறப்பைப் பெற்ற தலம்…
சிதம்பரம்
14. வாழ்வில் ஒருமுறையேனும் செல்ல வேண்டிய தலம்…
காசி
15.சிவன் நெருப்பாக வளர்ந்து நின்ற தலம்…
திருவண்ணாமலை
16. அம்பிகை மயில் வடிவில் சிவனை பூஜித்த தலம்…
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்
17. மாதம் தோறும் வரும் விழாக்களைப் பட்டியலிடும் தேவாரம்…
மயிலாப்பூர் தேவாரம் (சம்பந்தர் பாடியது)
18. தட்சிணாமூர்த்தி கைவிரல்களை மடக்கிக் காட்டும் முத்திரையின் பெயர்…
சின்முத்திரை
19. கயிலாயத்தில் தேவலோகப்பெண்களுடன் காதல் கொண்டதால், பூலோகத்தில் பிறவி எடுத்தவர்…
சுந்தரர்