இன்போசிஸ் ஊழியர்கள் ஷாக்.. சம்பள உயர்வைத் தொடர்ந்து அடுத்த பிரச்சனை..!!
இன்போசிஸ் நிறுவனத்தின் நிகர லாபம் செப்டம்பர் காலாண்டை ஒப்பிடுகையில் டிசம்பர் காலாண்டில் 7 சதவீதம் சரிந்து 6,106 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.
இதேபோல் ஆப்ரேட்டிங் வருவாய் 1% அதிகரித்து ரூ.38,821 கோடியாக உள்ளது.செப்டம்பர் 2023 காலாண்டில் 14.6% ஆக இருந்த அட்ரிஷன் விகிதம், டிசம்பர் காலாண்டில் அட்ரிஷன் ரேட் 12.9% ஆக உள்ளது. கடந்த வருடம் இதே காலகட்டத்தில் 24.3% ஆகவும் இருந்து. இந்த நிலையில் அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் நிகர ஊழியர்கள் எண்ணிக்கை 3,22,663 ஆகக் குறைந்துள்ளது. செப்டம்பர் காலாண்டில் இதன் எண்ணிக்கை 3,28,764 ஆக இருந்தது. இதன் மூலம் 3 மாதத்தில் 6101 ஊழியர்கள் குறைந்துள்ளனர்.இன்போசிஸ் நிறுவனம் பொதுவாகத் தனது ஊழியர்களுக்கான சம்பள உயர்வை ஜூன்/ஜூலையில் அறிவிக்கப்பட்டு, ஏப்ரல் மாதத்திலிருந்து கணக்கிட்டு அளிக்கப்படும்.ஆனால் இந்த வருடம் சுமார் 8 மாதமாகச் சம்பள உயர்வை அளிக்காமல் செப்டம்பர் காலாண்டில் ஊழியர்களின் வெளியேற்றத்தைக் குறைப்பதற்காக நவம்பர் 1 ஆம் தேதி முதல் சம்பள உயர்வை அளிக்கப்பட்டதாகக் கூறி பெரிய ஷாக் கொடுத்தது.தாமதமாக வந்தாலும் வருகிறதே என்ற எண்ணத்தில் சம்பள உயர்வுக்காகக் காத்திருந்த ஊழியர்களுக்கு டிசம்பர் 15 ஆம் தேதி வரையில் சம்பள உயர்வு கடிதத்தை அளிக்காமல் காலம் கடத்தி கொடுத்தது.அப்படிக் கொடுக்கப்பட்ட சம்பள உயர்வில் இன்போசிஸ் நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் வெறும் 40 சதவீத ஊழியர்களுக்கு மட்டுமே சம்பள உயர்வு கொடுக்கப்பட்டதாக இந்நிறுவன ஊழியர்கள் கூறினர். கொடுக்கப்பட்ட சம்பள உயர்வு 4 சதவீதம், 5 சதவீதம் அதிகப்படியாக 10 சதவீதம் மட்டுமே இருந்தாக இன்போசிஸ் ஊழியர்கள் புலம்பினர்.இதனால் இன்போசிஸ் ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு என்ற வார்த்தையைக் கேட்டாலே கோபம் வரும் அளவு மோசமான சம்பள உயர்வைக் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் டிசம்பர் காலாண்டில் ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்து வருவது மூலம் சலசலப்பு ஏற்றப்பட்டு உள்ளது.இந்தியாவில் பிற ஐடி நிறுவனங்களைப் போலவே இன்போசிஸ் நிறுவனத்தின் மொத்த வருவாயில் பெரும் பகுதி BFSI பிரிவில் இருந்துதான் வருகிறது.