இன்போசிஸ்: லாபத்தில் பெரும் சரிவு.. சலில் பாரிக் நிலைமை திண்டாட்டம்..!

இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ், டிசிஎஸ் நிறுவனம் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட அதே நாளில் வெளியிட்டு பெரும் பாதிப்பைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 6,106 கோடி ரூபாயாக உள்ளது.
இது கடந்த ஆண்டின் இதே டிசம்பர் காலாண்டை ஒப்பிடுகையில் பதிவான ரூ.6,586 கோடியை பார்க்கும் போது சுமார் 7% குறைந்துள்ளது. இன்போசிஸ் நடப்பு நிதியாண்டின் 3வது காலாண்டில் செயல்பாட்டு வருவாய் அதாவது ஆப்ரேட்டிங் வருவாய் 1% அதிகரித்து ரூ.38,821 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.38,318 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.இதேவிட மோசமான விஷயம் என்னவென்றால் இன்போசிஸ் 2024 ஆம் நிதியாண்டுக்கான வருவாய் வளர்ச்சி விகிதம் 1% – 2.5% அளவில் இருந்து 1.5%-2% ஆகக் குறைத்துள்ளது. இதன் மூலம் மார்ச் காலாண்டிலும் மந்தமான வருவாய் மற்றும் லாபத்தை மட்டுமே வரும் எனத் தெரிகிறது. இன்போசிஸ் பங்கு முதலீட்டாளர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது. வேலையை காட்டினார் டெக் மஹிந்திரா சிஇஓ.. இன்போசிஸ்-க்கு செக்..!! FY24க்கான வருவாய் முன்னறிவிப்பில், பெங்களூருவை தளமாகக் கொண்ட IT ஏற்றுமதியாளர் மதிப்பீட்டை 1.5% ஆக உயர்த்தியுள்ளார், ஆனால் மேல் இறுதியில் அதை 2% ஆகக் குறைத்துள்ளார். இருப்பினும், நிறுவனம் அதன் செயல்பாட்டு வரம்பு இலக்கை 20-22% தக்க வைத்துக் கொண்டுள்ளது.இன்போசிஸ் டிசம்பர் காலாண்டில் சுமார் 3.2 பில்லியன் டாலர் மதிப்பிலான பெரிய டீல்களைப் பெற்றுள்ளது.