Instant Idli Mix: மாவு அரைக்க தேவையில்லை.., பஞ்சுபோல் இட்லி செய்யலாம்
பொதுவாகவே தென்னிந்தியர்களின் வீடுகளில் காலை மற்றும் இரவு நேரங்களில் இட்லி மற்றும் தோசை தான் உணவாக இருக்கும்.
இட்லி, தோசையை செய்வது சுலபம் தான், ஆனால் அதற்கு மாவு தயார் செய்வது தான் கடினமானதாகும்.
அந்தவகையில், இந்த உடனடி இட்லி மாவை அரைத்து வைத்துக்கொண்டால், தினமும் 10 நிமிடத்தில் பஞ்சுபோன்ற இட்லி செய்யலாம்.
தேவையான பொருட்கள்
இட்லி அரிசி- 4 கப்
உளுந்து- 1 கப்
வெந்தயம்- 1 ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
செய்முறை
முதலில் அரிசியை ஒரு பாத்திரத்தில் சேர்த்து 2- 3 முறை நன்கு கழுவி அதனை வெயிலில் ஒரு நாள் முழுக்க காயவைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து உளுந்து மற்றும் வெந்தயத்தை அதே போல் 2- 3 முறை நன்கு கழுவி அதனையும் வெயிலில் நன்கு காயவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் காயவைத்த அரிசியை மிக்ஸி ஜாரில் சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இதனைத்தொடர்ந்து காய்ந்த உளுந்தை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு நைசாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் ஒரு தட்டில் அரைத்த அரிசி மற்றும் உளுந்து மாவை கொட்டி ஒன்றாக கலந்துக்கொள்ளவும்.
அடுத்து இந்த மாவை ஒரு டப்பாவில் சேகரித்து வைத்துக்கொள்ளலாம்.
இட்லி சுடுவதற்கு முந்தைய நாள் இரவே ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை சேர்த்து தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கெட்டியாக கரைத்து வைத்துக்கொள்ளவும்.
பின் கரைத்த மாவை மூடி போட்டு அன்று இரவு முதல் புளிக்க வைக்கவும். பின் மறுநாள் காலையில் அரைத்த மாவை கொண்டு இட்லி பாத்திரத்தில் வழக்கம்போல் இட்லி சுட்டு எடுத்தால் போதும்.