இன்ஸ்டன்ட் வத்தக்குழம்பு பொடி ரெசிபி.. தண்ணீரில் கொதிக்க வைத்தால் போதும்..!

தற்போதுள்ள காலசூழ்நிலைக்கு காலையில் ஒருவர் எழுந்து சமைத்து வேலைக்கு செல்வதற்கு அவ்வளவு சிரமப்படுகிறார்கள். மேலும் பலர் பேச்சிலர் ரூம் அல்லது ஹாஸ்டல் போன்ற இடங்களில் தனியாக வசித்து வருகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் ருசியாக சாப்பிட வேண்டும் என்பதற்க்காக தான் இந்த இன்ஸ்டன்ட் வத்தக்குழம்பு பொடி ரெசிபி…

ஒரு அவசரமான சமையல் செய்ய வேண்டிய நாளிலோ அல்லது ஏதேனும் சுற்றுலா சென்றாலே இந்த குழம்பை நீங்கள் தயார் செய்து வைத்துக்கொண்டால் தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் :

  • புளி – 20 கிராம்
  • மணத்தன்னாளி வத்தல் – 20 கிராம்
  • துவரம் பருப்பு – 50 கிராம்
  • கடலை பருப்பு – 50 கிராம்
  • வர மிளகாய் – 15
  • வரமல்லி – 100 கிராம்
  • மிளகு – ஒரு டேபிள் ஸ்பூன்
  • வெள்ளை எள் – ஒரு டேபிள் ஸ்பூன்
  • நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
  • கடுகு – கால் ஸ்பூன்
  • சோம்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
  • வெந்தயம் – ஒரு டேபிள் ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
  • பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன்
  • வெல்லம் – ஒரு டேபிள் ஸ்பூன்
  • கறிவேப்பிலை – ஒரு கொத்து
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை :

முதலில் அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து வர மல்லி, கடலை பருப்பு, துவரம் பருப்பு, வெந்தயம், சோம்பு, மிளகு, வெள்ளை எள், வர மிளகாய், புளி ஆகிய அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக பொன்னிறமாக மாறும் வரை வறுத்து கொள்ளவும்.

வறுத்த அனைத்து பொருளையும் சேர்த்து நன்றாக ஆறவைக்க வேண்டும்.

பின்னர் அதில் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, வெல்லம், பெருங்காயத்தூள் ஆகியவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

இவை அனைத்தும் சீக்கிரம் அரைபடாது என்பதால் அவற்றை மீண்டும் மீண்டும் சலித்து அரைத்து பொடி தயாரிக்க வேண்டும்.

அதன் பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் கடுகு, மணத்தன்னாளி வத்தல், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அவற்றை பொடியில் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.

அவ்வளவுதான் இன்ஸ்டன்ட் வத்தக்குழம்பு பொடி தயார்….

இதை ஒரு காற்றுப்புகாத கண்ணாடி பாட்டிலில் சேர்த்து 6 மாதங்கள் வரை அடைத்து பயன்படுத்தலாம்.

உங்களுக்கு குழம்பு வைக்க முடியாத நாட்களில் இந்த பொடியை வைத்து பின்வருமாறு ஈசியாக குழம்பு தயாரித்துவிடலாம்.

ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதித்ததும் இந்த இன்ஸ்டன்ட் வத்தக்குழம்பு பொடியில் 2 ஸ்பூன் சேர்த்து வத்தக்குழம்பு ரெடி…

சூடான சதாம் மற்றும் மொறு மொறு அப்பளத்துடன் இதை பரிமாறலாம்.

 

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *