Instant Tea Powder: வெந்நீர் மட்டும் ஊத்தினால் போதும்.., சுவையான மசாலா டீ தயார்

தேநீரின் சுவை பலரையும் அடிமையாக்கியுள்ளது. தேநீர் குடிப்பதனால் உடலை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

இனிமேல் தேநீர் செய்வதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ள தேவையில்லை. இந்த Instant Tea Powder-ஐ பயன்படுத்தி 2 நிமிடத்தில் செய்துவிடலாம்.

இந்த Instant Tea Powder-ல் வெந்நீர் ஊத்தினால் மட்டும் போதும் சுவையான மசாலா டீ நொடியில் தயாராகிவிடும்.

தேவையான பொருட்கள்
பால் பவுடர் – 1½ கப்
டீ தூள் – ¾ கப்
சர்க்கரை – ¾ கப்
ஏலக்காய் – 10-12
​இலவங்கப்பட்டை – 3 துண்டு
குங்குமப்பூ – 3 இதழ்

செய்முறை
ஒரு மிக்ஸி ஜாரில் ஏலக்காய் மற்றும் இலவங்கப்பட்டையைச் சேர்த்து நன்கு பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக அதில் டீ தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதை ஒரு பௌலில் சேர்த்து அதோடு எடுத்து வைத்திருக்கும் பால் பவுடரையும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

நன்கு கலந்த பின் இதை ஒரு காற்று புகாத பாட்டிலில் போட்டு சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த பவுடரை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து, ஒரு கப்பில் போட்டு, நன்கு கொதிக்கும் வெந்நீரை ஊற்றினால் சுவையான மசாலா டீ ரெடி.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *