சுவாரஸ்ய தகவல்..! ஜனவரி 1-ல் தங்கம் ஒரு பவுன் ரூ.41,040; டிசம்பர் 31-ல்….?

அடுத்த 8 நாட்களிலேயே, தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.145 உயர்ந்து ரூ.5,260-க்கும், பவுன் ஒன்றுக்கு ரூ.1,160 உயர்ந்து ரூ.42,080-க்கும் விற்பனை ஆனது.

இதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஏறி வந்த தங்கம், விலை, பொங்கலுக்கு அடுத்த நாள் ஜனவரி 16-ம் தேதி ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,317. ஒரு பவுன் தங்கம் விலை ரூ.42,536.

ஜனவரி மாதம் முழுவதும் ஏறியும், இறங்கியும் வந்த தங்கம் விலை, பிப்ரவரி 2-ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.5,475-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.43,800-க்கும் விற்பனை

ஆனதுஇந்த விலை உயர்வு, பிப்ரவரி 1-ம் தேதி நடந்த மத்திய பட்ஜெட்டின் எதிரொலி என்கிறார்கள் சிலர்.

கடந்த மார்ச் 21-ம் தேதி, ஒரு கிராம் தங்கம் ரூ.5,570-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.44,560-க்கு விற்பனை ஆனது. பின்னர் படிப்படியாக உயர்ந்துவந்த தங்கம் விலை, ஏப்ரல் 5-ம் தேதி ஒரு கிராமுக்கு ரூ.5,690-க்கும், ஒரு பவுனுக்கு 45,520-க்கும் விற்பனை ஆனது.தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14-ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.5,720-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.45,760-க்கும் விற்பனையான

துஇந்த ஆண்டு அட்சய திதி அன்று தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.5,605-க்கும், ஒரு பவுனுக்கு ரூ.44,840-க்கும் விற்கப்பட்டது.ஜூலை மாதம் முதல் சற்று குறைய ஆரம்பித்த தங்கம் விலை, அக்டோபர் மாதம் 4-ம் தேதி கிராமுக்கு ரூ.5,285 வரையும், பவுனுக்கு ரூ.42,285 வரையும் குறைந்தது.

அக்டோபர் 14-ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.5,555-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.44,440-க்கும் விற்பனை ஆனது. வெறும் இரண்டு நாட்களில் தங்கம் விலை கிட்டதட்ட ரூ.1000 உயர்ந்துள்ளது. அக்டோபர் 28-ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.5,770-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.46,160-க்கு விற்பனை ஆகி, தங்கம் விலை மீண்டும் ரூ.46,000-க்கு உயர்ந்தது

.தீபாவளிக்கு (நவம்பர் 12) ஒரு கிராம் தங்கம் ரூ.5,600-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.44,800-க்கும் விற்பனை ஆனது. அடுத்து 5 நாட்களிலேயே தங்கம் விலை பவுனுக்கு ரூ.45,600 ஆகிவிட்டது.

அதே மாதமே தங்கம் விலை தாறுமாறாக எகிறி நவம்பர் 29-ம் தேதி ஒரு கிராம் ரூ.5,865-க்கும், ஒரு பவுன் ரூ.46,920-க்கும் விற்பனை ஆனது.

இதுவரையிலும் புதிய உச்சமான ரூ.47,000-த்தை தங்கம் டிசம்பர் மாதம் தொட்டது. நவம்பர் 2-ம் தேதி தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.5,915 ஆகவும், ஒரு பவுனுக்கு ரூ.47,320 ஆகவும் இருந்

தது.நவம்பர் 4-ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.47,500-ஐ தாண்டியது. அன்றிலிருந்து ஏறியும், இறங்கியும் தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.5,910 ஆகவும், பவுனுக்கு ரூ.47,280 ஆகவும் விற்பனை ஆகி வருகிறது.

இப்படி ஒரு பவுன் தங்கம் விலை ரூ.41,040-ல் தொடங்கி, இன்று (31/12/23) ரூ.47,280-ல் முடிகிற நிலையில் இருக்கிறது

.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *