இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர்: புதிய நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை

டைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்றத்தில் நடப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில், இன்று இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தலைமையில் தொடங்கியது.

அவரது உரையில் கூறியதாவது:

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இது எனது முதல் உரை.

ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற இலக்கை நோக்கிப் பயணிக்கிறோம். நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் வறுமையின் பிடியில் இருந்து 25 கோடி பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

எந்த ஒரு பயனாளியும் விட்டுவிடாமல் அரசின் பயங்கள் சென்றடைய வேண்டும் என்பதை எனது அரசின் இலக்கு ஆகும்.

ஏழைகளுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளது. உதான் திட்டத்தின் மூலம் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு குறைந்த விலையில்லா விமான டிக்கெட்; வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க ஜல்ஜீவன் திட்டத்திற்கு ரூ.4 லட்சம் கோடி செலவழிக்கப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன்பு இரட்டை இலக்கத்தில் இருந்த விலைவாசி உயர்வு தற்போது ஒற்றை இலக்கத்தில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ரூ.2.5 லட்சத்தில் இருந்து தனி நபர் வருமான வரி விலக்கு தற்போது ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என அரசின் சாதனைகளை அவர் எடுத்துரைத்தார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *