சர்வதேச திரைப்பட விழா… பாராட்டுக்களை குவித்த வெற்றிமாறனின் விடுதலை 1, 2 படம்

தமிழ் சினிமாவில் விமர்சகர்களால் பெரிதும் பாராட்ட விடுதலை முதல் பாகம் மற்றும் 2-ம் பாகம்,சர்வதேச திரைப்பட விழா ரோட்டர்டாம் ( IFFR) 2023- ல் திரையிடப்பட்டு பெரும் பாராட்டுக்களை பெற்றுள்ளது.
இது குறித்து சோனி மியூசிக் சவுத் (இந்தியா) இன்று தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ளது
தமிழில் ‘விடுதலை’ என்றால் சுதந்திரம். இந்த படம் பகுதிகளைக் கொண்ட திரைப்படமாகும். இந்தியாவின் கிராமப்புற பகுதியில் அடக்குமுறை மற்றும் அநீதிக்கு எதிராக போராடும் கிளர்ச்சியாளர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தில், சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கௌதம் மேனன், சேத்தன், ராஜீவ் மேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.
விடுதலை படத்தின் முதல் பாகம் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையவில்லை. இருப்பினும், இயக்குனர் வெற்றிமாறன் இரண்டு பாகங்களின் காட்சிகளையும் ஒரே திரைப்படமாக இணைத்து லைம்லைட் பிரிவின் கீழ் ரோட்டர்டாம் (IFFR)-ல் திரையிட அனுப்பியுள்ளார்.