கனடாவில் அதிகரிக்கும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை: வெளியான காரணம்
கனடாவில் சர்வதேச மாணவர்களின் அதிகரிப்பிற்கான காரணம் பற்றிய விபரங்கள் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.
தனியார் கல்லூரிகளினால் இவ்வாறு மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனடாவில் பல்வேறு பல்கலைக்கழகங்கள் கூடுதல் எண்ணிக்கையிலான வெளிநாட்டு மாணவர்களை உள்ளீர்ப்பு செய்துள்ளது.
மாணவர்களின் எண்ணிக்கை
மேலும், 2018ஆம் ஆண்டின் பின்னர் மாணவர் உள்ளீர்ப்பு எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் ளெிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு அரசாங்கம் தற்பொழுது நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.