சரக்கு போக்குவரத்துக்கு ஏற்ற கார்கோஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

புனேவை தலைமையிடமாக கொண்ட கார்கோஸ் (Qargos) ஸ்டார்ட்அப் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய F9 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் அதிகபட்சமாக 120 கிலோ சுமை தாங்கும் திறனுடன் 225 லிட்டர் கொள்ளளவு கொண்ட கார்கோ பாக்ஸ் முன்பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.

இதை பார்த்தவுடனே பலருக்கு நினவுக்கு வருகின்ற முன்பக்கத்தில் ஐஸ்பெட்டி வைத்து ஐஸ் வியாபரம் செய்யும் சைக்கிள்களை பார்த்திருக்கலாம். அந்த வடிவமைப்பினை அடிப்படையாக கொண்ட மாடர்ன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்தான்…!

பல்வேறு சரக்குகளை எடுத்துச் செல்ல ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டுள்ள Qargos F9 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள கார்கோ பாக்ஸ் கொள்ளளவு 225 லிட்டர் வழங்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையிலான பயன்பாடிற்கு இந்த இடவசதி கஸ்டமைஸ் செயுது கொள்ளலாம். உலகில் எந்த மாடலும் இருசக்கர வாகனப் பிரிவில் இவ்வளவு பெரிய இடவசதியை கொண்டிருக்கவில்லை.

பிரசத்தி பெற்ற வடிவமைப்பு நிறுவனமான டசால்ட் சிஸ்டம்ஸ் டிசைன் செய்துள்ள ஸ்கூட்டரினை உற்பத்தி செய்கின்ற Qargos F9 மாடலில் ஒரு நபர் மட்டும் அம்ர்ந்து செல்லும் வகையில் முன்பக்கத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க் அமைப்பு மற்றும் பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர் உள்ளது.

பிரேக்கிங் அமைப்பில் இரண்டு பக்கமும் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டு கார்கோஸ் F9 பவர்டிரெய்ன் ஆனது 3.4 kW BLDC ஹப் மோட்டார் பொருத்தப்பட்டு மணிக்கு அதிகபட்ச வேகம் 80 km ஆகவும், 6.1 kWh லித்தியம் அயன் பேட்டரியைக் கொண்டு முழுமையான சிங்கள் சார்ஜில் 150 கிமீ வரை உண்மையான பயணிக்கும் வரம்பை வெளிப்படுத்துகின்றது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *