ஸ்கிராம்பளர் ஸ்டைலில் Husqvarna Svartpilen 250 அறிமுக விபரம்
இந்தியாவில் Husqvarna நிறுவனத்தின் ரெட்ரோ மற்றும் மாடர்ன் ஸ்டைல் பெற்ற Svartpilen 250 ஸ்கிராம்பளர் மற்றும் Vitpilen 401 க்ஃபே ரேசர் என இரண்டும் அடுத்த சில வாரங்களுக்குள் விலை அறிவிக்கப்படலாம்.
இரு மோட்டார்சைக்கிளிலும் பொதுவாக கேடிஎம் நிறுவன 250cc லிக்யூடு கூல்டு என்ஜின் ஆனது பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 31hp மற்றும் 25Nm டார்க்கை உற்பத்தி செய்கின்றது. 6 வேக கியர்பாக்ஸ் உடன் க்விக் ஷிஃபடர் மற்றும் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் பெற்றிருக்கும்.
ட்ரெல்லிஸ் சேசிஸ் கொண்டுள்ள ஸ்விராட்பிளேன் 250 பைக்கில் 43mm WP USD ஃபோர்க் மற்றும் ப்ரீலோட் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் பெற்றுள்ள பைக்கின் முன்புறத்தில் 320மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 240மிமீ டிஸ்க் உள்ளது.
இந்த மாடலில் புதிய 5 இன்ச் எல்சிடி, டிராக்ஷன் கட்டுப்பாடு, ரைடு பை வயர், க்விக் ஷிப்டர்+, சுவிட்சபிள் ஏபிஎஸ் மற்றும் சி-வகை சார்ஜிங் போர்ட் ஆகியவற்றைப் பெறுகிறது.
கேடிஎம் டீலர்கள் மூலம் விற்பனையில் கிடைக்கின்ற ஹஸ்குவர்னா விட்பிளேன் 250 ஆனது ரூ.2.19 லட்சத்திலும், ஸ்வார்ட்பிளேன் 401 ஆனது ரூ.2.92 லட்சத்திலும் விற்பனைக்கு கிடைக்கின்றது. பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்ற இந்த பைக்குகள் சர்வதேச அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.