NPS திட்டத்தில் முதலீடு செய்து வருமான வரி விலக்கு பெறுவது எப்படி? விரிவான வழிகாட்டி.

வ ருமான வரி சேமிப்பு திட்டமிடல் என்ற உடனே நமது நினைவுக்கு வருவது 80C பிரிவு தான். ஆனால் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் நாம் வருமான வரி விலக்கு பெற முடியும்.
இந்திய வருமான வரி சட்டத்தின் 80CCD பிரிவின் கீழ் ரூ.2 லட்சம் வரை வரி விலக்கு பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம்.பிரிவு 80CCD: மத்திய அரசின் ஓய்வூதிய திட்டமான தேசிய ஓய்வூதிய திட்டம்(NPS) அல்லது அடல் பென்சன் திட்டத்தில் தனிநபர் மேற்கொண்ட பங்களிப்புக்காக வரி விலக்கு அளிக்கும் பிரிவு இது. அதாவது NPS திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்திருந்தால் வரி சலுகை பெற முடியும்.
80CCDஇன் உட்பிரிவுகள்:1) 80CCD (1): தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் தனிநபர் (ஊழியர்/ சுய தொழில் புரிவோர்) மேற்கொண்ட பங்களிப்புக்கான வரி விலக்கு2) 80CCD (2): வேலை வழங்கிய முதலாளி தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் செய்த பங்களிப்புக்கான வரி விலக்குப் பிரிவு 80CCD(1): தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் அரசு /தனியார் ஊழியர் அல்லது சுயதொழில் செய்பவர் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் செய்த பங்களிப்பை காட்டி இந்த பிரிவின் கீழ் வரி விலக்கு பெறலாம். சுயதொழில் புரிவோருக்கு அனுமதிக்கப்படும் அதிகபட்ச விலக்கு முந்தைய ஆண்டு அவர்களின் மொத்த வருமானத்தில் 20% ஆகும்.
80CCD(1) இன் கீழ் விலக்குகளின் அதிகபட்ச வரம்பு ஒரு நிதியாண்டில் ரூ.1.5 லட்சம் ஆகும். சலுகைகளை கோர முடியும்.அதாவது 80CCD(1B) பிரிவில் ரூ.50,000 கூடுதலாக வரி விலக்கு பெற முடியும். எனவே, 80CCDயின் கீழ் ஒருவர் நிறுவனம் பெறக்கூடிய அதிகபட்ச வரி விலக்கு ரூ.2 லட்சம் ஆகும்.பிரிவு 80CCD(2):பிரிவு 80CCD(2) பிரிவின் கீழ் தேசிய ஓய்வூதிய திட்டத்திற்கு, நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் பெயரில் செலுத்திய பங்களிப்பு மீது வரி விலக்கு கிடைக்கிறது.
PPF, EPF ஆகியவற்றுடன் கூடுதலாக ஒரு நிறுவனம் ஊழியர்களின் தேசிய ஓய்வூதிய திட்டத்திற்கு பங்களிப்பு செய்யலாம். முதலாளியின் பங்களிப்பாக ஊழியரின் பங்களிப்புக்கு சமமாகவோ அல்லது அதை விட அதிகமாகவோ இருக்கலாம்.இந்த பிரிவின் கீழ் மத்திய அரசு அல்லது அரசு நிறுவனங்கள் வாயிலாக ஊழியர்கள் பெற கூடிய அதிகபட்ச வரி விலக்கு வரம்பு : அவர்களின் ஊதியத்தில் (BASIC + DA ) 15%தனியார் நிறுவன இருப்பின் ஊதியத்தில்(BASIC + DA ) அதிகபட்சமாக 10% விலக்கு பெற முடியும்.
தேசிய ஓய்வூதிய திட்டத்திற்கான நிபந்தனைகள்:வருமான வரி விலக்கு பெற TIER 1 கணக்கில் ஒருவர் குறைந்தது ஆண்டுக்கு ரூ.6000 அல்லது மாதத்திற்கு ரூ.500 பங்களிப்பு செய்ய வேண்டும்TIER 2 கணக்கில் குறைந்தபட்சம் ரூ.2,000 அல்லது மாதத்திற்கு ரூ.250 பங்களிப்பு செய்திருக்க வேண்டும்80CCD சிசிடி பிரிவின் கீழ் கோரப்பட்ட வரிச் சலுகைகளை மீண்டும் 80C பிரிவின் கீழ் கோர முடியாது.