கிழக்கே போகும் முதலீடு.. முதல்ல JSW, இப்போ டாடா..!! நல்லாயிருக்கு கணக்கு..?!
உ லகின் டாப் 10 பொருளாதார நாடுகளில் இந்தியாவின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் வேளையில் உள்நாட்டு முதலீடுகளும் சரி, வெளிநாட்டு முதலீடுகளும் சரி சிறப்பான வர்த்தகச் சூழ்நிலை உள்ளது.
இந்த நிலையில் உள்நாட்டு நிறுவனங்கள் பெரும்பாலும் முதலீடும் செய்யும் இடங்களைத் தாண்டி தற்போது புதிய பாதையில் செல்ல துவங்கியுள்ளது. பொதுவாக இந்தியாவின் முன்னணி வர்த்தகச் சாம்ராஜ்ஜியங்கள் தென்னிந்திய மாநிலங்கள், வட இந்தியாவில் குஜராத், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகியவை மாநிலங்களில் தான் அதிகம் முதலீடு செய்யும். இந்த நிலையில் கடந்த 3 மாதத்தில் பல புதிய மற்றும் பெரும் முதலீடுகள் கிழக்கு இந்திய மாநிலங்களுக்கு நகரத் துவங்கியுள்ளது. இதில் முக்கியமாகச் சமீபத்திய JSW மற்றும் டாடா குழுமத்தின் முதலீடுகள் மிகப்பெரிய அட்டிராக்ஷனாக மாறியுள்ளது என்றால் மிகையில்லை.
இந்த மாற்றம் புதிய முதலீட்டுப் பார்வையும், பிற பெரிய வர்த்தகக் குழுமங்களையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது என்றால் மிகையில்லை. தற்போது JSW குழுமம் ஒடிசாவிலும், டாடா குழுமம் அசாம் மாநிலத்திலும் பெரும் தொகையை முதலீடு செய்ய உள்ளது.
JSW எலக்ட்ரிக் வாகன முதலீடு: JSW குழுமம் ஒடிசா மாநிலத்தில் கட்டாக் மற்றும் பாரதீப் பகுதிகளில் எலக்ட்ரிக் வாகனம் (EV) மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி உற்பத்தி தொழிற்சாலையைத் திட்டத்தை அமைக்க ஒடிசா அரசாங்கத்துடன் ரூ.40,000 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் பிப்ரவரி 10ஆம் தேதி கையெழுத்திட்டது. இரண்டு தொழிற்சாலை: எலக்ட்ரிக் வாகனம் மற்றும் அதன் பேட்டரி உற்பத்தி வளாகத்திற்காகக் கட்டாக்கில் ரூ.25,000 கோடி முதலீடு செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.