IPL 2024 : Badass தோனி.. அடப்பாவி விராட் கோலி.. நீயாடா அது.. தெறிக்கும் சிஎஸ்கே ரசிகர்களின் மீம்ஸ்!
ஐபிஎல் தொடருக்கான பயிற்சி முகாமில் பங்கேற்க சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி சென்னை வந்துள்ள நிலையில், சென்னை அணி நிர்வாகம் லியோ படத்தை மறு உருவாக்கம் செய்து வீடியோ வெளியிட்டது. இதனை வைத்து ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.
சிஎஸ்கே பயிற்சி முகாமில் பங்கேற்க தோனி சென்னை வந்த நிலையில், அணி நிர்வாகம் அவரது வருகையை லியோ படத்தின் விஜயை அறிமுகக் காட்சியை வைத்து “பேடாஸ்” வீடியோ வெளியிட்டது. அதில் அர்ஜூனுக்கு பதிலாக சிங்க பொம்மையுடன் ஒருவர் தோனியின் புகைப்படத்தை உடைப்பார். அதேபோல் தோனியை நேரடியாக வரவேற்பார். அந்த சிங்க முகம் கொண்டவர் யார் என்று அறிந்து கொள்வதற்காக, பொம்மை முகத்தை கழற்றிய போது விராட் கோலி இருப்பது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் குபீர் ரகம்.
ஒவ்வொரு ஆண்டும் சிஎஸ்கே பயிற்சி முகாமிற்கு மார்ச் 2ஆம் தேதி பங்கேற்க வரும் தோனி, இம்முறை மார்ச் 5ஆம் தேதி வந்துள்ளார். கடந்த ஒரு முறையும் கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக மாஸ்க் அணிந்த நீல நிற டீ-ஷர்ட்டில் வந்த தோனி, இம்முறை சிவப்பு நிற டீ-சர்ட்டில் விண்டேஜ் லுக்குடன் வந்திருப்பதை ஒப்பிட்டு உருவாக்கப்பட்டுள்ள மீம் பக்கா மாஸ்.
நேற்றிரவு உலகம் முழுவதும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகள் முடங்கியது. இதனை தோனியின் வருகையுடன் ஒப்பிட்டு மீம் உருவாக்கப்பட்டுள்ளது. சிங்கம் படத்தில் சூர்யா, “பாத்தல.. கேட்டல்ல.. எஸ்-னு சொன்னதும் ஓட்டு வீட்ல உட்கார்ந்து இருப்பான்.. ஓட்ட பிரிச்சு போட்றலாம்னு வந்தியோ.. சொந்த ஊர்க்காரன்ல” என்று கூறுவார். அதனை மாற்றி, “பாத்தல.. கேட்டல.. தலைவன் சென்னைல கால் வச்சதுக்கே ஃபேஸ்புக், இன்ஸ்டானு ஸ்தம்பிக்க ஆரம்பிச்சிடுச்சு.. தலைவன் கிரவுண்ட்ல கால் வச்சா இந்தியாவுல நிலநடுக்கமே வரும் போல..” என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் மிரட்டல் ரகம்.
சிஎஸ்கே நிர்வாகம் தரப்பில் தோனியின் வருகையையொட்டி வெளியிடப்பட்டுள்ள வீடியோவை பார்த்து, ஐபிஎல் தொடர் மீதான ஹைப் எகிறியுள்ளதாக பலரும் கொண்டாடி வருகின்றனர். இதனை கிண்டல் செய்யும் வகையில், பொல்லாதவன் படத்தில் சந்தானத்திடம் தனுஷ், “பைக்க தொட்டாலே திட்டிறியே” என்று நக்கல் செய்வார். அதனை மாற்றி, தல சென்னை என்ட்ரிக்கு வீடியோ போட்டிருக்கோம்.. பாத்து ஹைப் ஏத்திக்கிறீங்களா? என்று சிஎஸ்கே நிர்வாகம் கேட்பது போலவும், அதற்கு ரசிகர்கள், “நீ ஹைப்போட சேர்த்து டிக்கெட் ரேட்டையும் ஏத்துவியே” என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் சிஎஸ்கே ரசிகனின் மனக்குமுறல்.