IPL 2024 : ரோகித் சர்மாவுக்கு துரோகம்.. மும்பை அணி செய்தது சரியல்ல.. யுவராஜ் சிங் கொந்தளிப்பு!

கேப்டன்சி விவகாரத்தில் மும்பை அணி நிர்வாகம் கொஞ்சம் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் யுவராஜ் சிங் விமர்சித்துள்ளார்.

17வது சீசனுக்கான ஐபிஎல் தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மும்பை அணியின் பயிற்சி முகாம் பரபரப்பாக உள்ளது. ஏனென்றால் 2 ஆண்டுகளுக்கு பின் ஹர்திக் பாண்டியா கேப்டனாக கம்பேக் கொடுத்துள்ளார். அதேபோல் மும்பை அணி கோப்பையை வென்று சீசன்கள் கடந்துவிட்டது.

இதனால் குஜராத் அணியில் இருந்த ஹர்திக் பாண்டியாவை ட்ரேட் மூலமாக மும்பை அணிக்கு கொண்டு வந்ததோடு, 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற ரோகித் சர்மாவை பதவி நீக்கம் நீக்கம் செய்தது. இதனால் ரோகித் சர்மாவின் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். இந்திய அணியின் கேப்டனாக சாதனைகளை படைத்து வரும் ரோகித் சர்மாவை நீக்கியது தவறு என்று மும்பை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இருப்பினும் மும்பை அணி நிர்வாகம் தரப்பில், எதிர்காலத்தை மனதில் வைத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சொல்லி வருகிறது. இருப்பினும் ரோகித் சர்மாவின் ரசிகர்கள் பலரும் மும்பை அணியை பின் தொடர்வதில் இருந்து பின்வாங்கி வருகின்றனர். அதேபோல் ஹர்திக் பாண்டியா கேப்டன்சி பதவி பெற்றதற்கு சூர்யகுமார், பும்ரா உள்ளிட்ட எந்த வீரரும் வாழ்த்து கூற சொல்லவில்லை.

இதனால் மும்பை அணி வீரர்களுக்கு இடையே நல்ல புரிதல் இல்லை என்று விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இதுகுறித்து மும்பை முன்னாள் வீரர் யுவராஜ் சிங் பேசுகையில், 5 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றவர் ரோகித் சர்மா. அவரை கேப்டன்சியில் இருந்து நீக்கியது மிகப்பெரிய முடிவு. நானாக இருந்திருந்தால் ஹர்திக் பாண்டியாவை இன்னொரு வீரரை மும்பை அணிக்கு கொண்டு வந்திருப்பேன். அதேபோல் மும்பை அணி நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவை ஒரு சீசன் காத்திருக்க சொல்லி இருக்கலாம்.

இந்த சீசனில் அவருக்கு துணை கேப்டன் பதவி கொடுத்துவிட்டு, ரோகித் சர்மாவையே கேப்டனாக தொடர்ந்திருக்கலாம். மும்பை அணி நிர்வாகத்தில் பார்வையில் இருந்து பார்க்கும் போது, இந்த முடிவிற்கு பின்னால் இருக்கும் காரணங்கள் புரிகிறது. ஆனால் ரோகித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதனை மறக்க கூடாது. அதேபோல் குஜராத் அணியின் கேப்டனாக இருப்பதும், மும்பை அணியின் கேப்டனாக இருப்பதும் ஒன்றல்ல என்று தெரிவித்துள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *