ஐபிஎல் 2024 – சிஎஸ்கே என்றாலே கெத்து தான்! எந்த அணிக்கும் கிடைக்காத பெருமை.. மும்பை எல்லாம் தள்ளு

ஐபிஎல் தொடரில் எந்த எந்த அணிக்குமே கிடைக்காத ஒரு மரியாதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மட்டும் கிடைத்திருக்கிறது. ஒரு தொடர் ஆரம்பிக்கிறது என்றால் எந்த அணிக்கு அதிக ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறதோ அவர்களை வைத்து தான் தொடங்குவார்கள்.

இதன் மூலம் இந்தத் தொடர் ஆரம்பித்து விட்டது என்று ரசிகர்கள் அனைவருக்கும் சேரும் வகையில் அந்தப் போட்டி அமையும். இன்னும் சில நேரத்தில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதோ அவர்களை வைத்து போட்டியை தொடங்குவார்கள்.

அந்த வகையில் ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசன் தொடரின் முதல் போட்டியில் வரும் மார்ச் 22ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடுகிறது. இதே போல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுவது கூடுதல் சிறப்பு. அதுமட்டுமல்லாமல் ஆர் சி பி அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த போட்டியில் எதிர்கொள்கிறது.

இப்படி நடைபெறுவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதல் முறை அல்ல. வரும் ஐபிஎல் 2024 ஆம் ஆண்டையும் சேர்த்தால் மொத்தம் 17 சீசன்களுக்கான அட்டவணையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒன்பது முறை சீசனின் முதல் போட்டியில் விளையாடியிருக்கிறது. அந்த வகையில் ஐபிஎல் தொடரின் வரலாற்றில் 2009,2011, 2012 ,2018, 2019,2020, 2022,2023, 2024 ஆகிய 9 ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் சீசனின் முதல் போட்டியில் விளையாடியிருக்கிறது.

இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தான் அதிக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது என்பது தெளிவாகி இருக்கிறது. இதனை சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மும்பை, ஆர் சி பி போன்ற அணிகள் சீசனின் முதல் போட்டியில் விளையாடி இருந்தாலும் இத்தனை முறை விளையாடிய பெருமை சிஎஸ்கேக்கு மட்டும்தான் கிடைத்திருக்கிறது.

அது மட்டுமல்லாமல் ஐபிஎல் போட்டிகள் மதிய நேரத்தில் நடந்தால் 3.30 மணிக்கும், இரவு நேரத்தில் நடந்தால் 7.30 மணிக்கும் இந்திய நேரப்படி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. வரும் 22 ஆம் தேதி ஆர் சி பி அணியுடனும் 26 ஆம் தேதி குஜராத் அணியுடனும், மார்ச் 31ஆம் தேதி டெல்லி அணியுடனும், ஏப்ரல் 5ஆம் தேதி சன்ரைசர்ஸ் அணியுடனும் சென்னை மோத உள்ளது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்ற தேர்தல் வருவதால் முதல் 21 போட்டிற்கான அட்டவணை மட்டும் தான் வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *