IPL 2024: சிஎஸ்கேயின் பலம் வாய்ந்த பேட்டிங் ஆர்டர் – தோனி பேட்டிங் செய்ய வாய்ப்பில்லை, அப்படி யார் இருக்கா?
ஒட்டுமொத்த உலகமே ஆவலுடன் எதிர்பாத்து காத்துக் கொண்டிருந்த அந்த தருணம் வந்துவிட்டது. ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்று நடக்கும் பிரம்மாண்ட தொடக்க விழா நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. ஐபிஎல் 2024 தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு டாஸ் நிகழ்வுடன் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக 6.30 மணிக்கு ஏ.ஆர்.ரஹ்மான், சோனு நிகம், அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் ஆகியோரது கலை நிகழ்ச்சிகள் தொடங்குகிறது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டிக்காக சினிமா பிரபலங்கள் உள்பட ஏராளமான ரசிகர்கள் ஒன்று கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் கேப்டனாக இருந்த எம்.எஸ்.தோனி கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ருத்ராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு பலரும் ஆதரவும், பாராட்டுக்களும் தெரிவித்து வரும் நிலையில் சிஎஸ்கே மற்றும் தோனியின் ரசிகர்கல் தங்களது எதிர்ப்பையும், கோபத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். கடந்த 2010, 2011, 2018, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 5 முறை டிராபியை வென்று கொடுத்தவர் எம்.எஸ்.தோனி. ஒரு கேப்டனாக சிஎஸ்கே அணியில் 235 போட்டிகளில் விளையாடிய தோனி, 142 போட்டிகளில் வெற்றி தேடி கொடுத்துள்ளார். 90 போட்டிகளில் தோல்வியும், ஒரு போட்டி டையிலும் முடிந்துள்ளது. சிஎஸ்கேயின் வெற்றி சதவிகிதம் 60.42 ஆகும்.
எந்த கேப்டனும் செய்யாத சாதனையை தோனி சிஎஸ்கே அணிக்காக செய்து கொடுத்தார். ஆனால், இந்த சீசனில் தோனி பேட்டிங் செய்வது என்பது கேள்விக்குறி தான். சிஎஸ்கே அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினால் மட்டுமே தோனி 7ஆவது அல்லது 8ஆவது வரிசையில் வந்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சீசனில் 16 போட்டிகளில் விளையாடிய தோனி 104 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஆனால், இந்த சீசனில் அவர் களமிறங்குவது என்பது அரிதான ஒன்று தான். ஏனென்றால், இந்த சீசனில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் ஆர்டர் அந்தளவிற்கு பலம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, அஜின்க்யா ரஹானே, சமீர் ரிஸ்வி, டேரில் மிட்செல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், மஹீத் தீக்ஷனா, மொயீன் அலி, முஷ்தாபிஜூர் ரஹ்மான், மிட்செல் சாண்ட்னர், துஷார் தேஷ்பாண்டே, அஜய் ஜதவ் மண்டல், பிரசாந்த் சோலாங்கி, முகேஷ் சவுத்ரி, சிமர்ஜீத் சிங், ஆர்எஸ் ஹங்க்ரேகர், ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து, அரவெல்லி அவனிஷ் ராவ், டெவோன் கான்வே.
குறிப்பு: டெவோன் கான்வே காயம் காரணமாக இதுவரையில் ஐபிஎல் தொடரில் இடம் பெறாத நிலையில், இனி வரும் போட்டிகளில் அவர் அணியுடன் இணைந்தால் இம்பேக்ட் பிளேயராக களமிறங்க வாய்ப்பிருக்கிறது. அவருக்குப் பதிலாக மாற்று வீரரையும் அணி நிர்வாகம் அறிவிக்கவில்லை. மஹீத் தீக்ஷனா ஐபிஎல் தொடரின் சில போட்டிகளுக்கு இடம் பெறுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரது வருகை குறித்து இதுவரையில் எந்த தகவலும் இல்லை.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
பாப் டூப்ளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, ரஜத படிதார், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் க்ரீன், மகிபால் லோம்ரார், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), அல்ஜாரி ஜோசஃப், கரண் சரமா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், ரீஸ் டாப்ளே, டாம் கரண், ஸ்வப்னில் சிங், விஜயகுமார் வைஷாக், லாக்கி பெர்குசன், மாயங்க தாகர், வில் ஜாக்ஸ், சுயாஷ் பிரபுதேசாய், அனுஜ் ராவத், மனோஜ் பாடேஜ், யாஷ் தயால், சௌரவ் சௌகான், ராஜன் குமார், ஹிமான்ஸு சர்மா.