IPL 2024 : சோசியல் மீடியா பக்கமே போகாதீங்க சார்.. இங்கிலாந்து ஜாம்பவானை வறுத்தெடுத்த ரிஷப் பண்ட்!

இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் மைக்கேல் வாஹன் அதிகமாக சோசியல் மீடியா பயன்படுத்துவதை இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட் கிண்டல் செய்துள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட். 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட், 15 மாதங்களுக்கும் மேலாக ஓய்வில் இருந்தார். மருத்துவமனை சிகிச்சை முடிவடைந்த நிலையில், மீண்டும் பழைய ஃபிட்னஸை எட்டுவதற்காக ரிஷப் பண்ட் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வந்தார்.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் விளையாடுவார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே என்சிஏ தரப்பில் முழுமையான ஃபிட்னஸ் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து டெல்லி அணியின் பயிற்சி முகாமில் பங்கேற்ற ரிஷப் பண்ட், தீவிர பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். அந்த வீடியோக்கள் ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.

இந்த நிலையில் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் முன்னாள் வீரர்களான மைக்கேல் வாஹன், ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோருடன் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது கில்கிறிஸ்ட் தரப்பில், நீங்களும் வாஹனும் எதிர் எதிர் அணிகளுக்காக விளையாடும் போது, எப்படி கலாய்ப்பாய் என்று ரிஷப் பண்ட்-டம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு கொஞ்சமும் யோசிக்காமல் ரிஷப் பண்ட், நீங்கள் கிரிக்கெட் விளையாடுவதை விடுத்து சோசியல் மீடியாவில் அதிக கவனம் வைத்துள்ளாய் என்று கலாய்ப்பேன் என்று பதில் அளித்தார். ரிஷப் பண்டின் பதிலால் கில்கிறிஸ்ட் மற்றும் வாஹன் இருவருமே வெடித்து சிரித்தனர். பின்னர் வாஹன் தரப்பில் கில்கிறிஸ்டை எப்படி கலாய்ப்பாய் என்று கேட்டதற்கு, அவர் எப்போதும் அவரது ஜோனில் இருப்பார். அதனால் பெரிதாக எதுவும் சொல்ல முடியாது என்று பதிலளித்தார்.

ரிஷப் பண்டின் இந்த பதில் ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது. 2019-20ல் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் சென்ற போது ரிஷப் பண்டை, ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் டிம் பெய்ன், பேபி சிட்டர் என்று கலாய்த்தார். அதற்கு உடனடியாக கலாய்த்த ரிஷப் பண்ட், உண்மையாகவே பெய்னின் குழந்தையை தூக்கி வைத்து போஸ் கொடுத்தது சர்வதேச அளவில் ட்ரெண்டாகியது குறிப்பிடத்தக்கது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *