IPL 2024 : முஷ்டாஃபிகுர் ரஹ்மான் கொடுத்த ட்விஸ்ட்.. சிஎஸ்கே அணியில் ஷமார் ஜோசப்? எப்படி தெரியுமா?
சென்னை: ஐபிஎல் தொடரில் இருந்து பாதி ஆட்டங்களுடன் முஷ்டாஃபிகுர் ரஹ்மான் புறப்படவுள்ள நிலையில், அவருக்கு பதிலாக சிஎஸ்கே அணி ஷமார் ஜோசப்பை ஒப்பந்தம் செய்ய வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி தொடங்கி மே மாதம் 26ஆம் தேதி வரை நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் முடிவடைந்த பின், அனைத்து வீரர்களும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க தயாராகி வருகின்றனர். இன்னொரு பக்கம் டெஸ்ட் அணியில் இல்லாத வீரர்கள் ஃபார்முக்கு வர ரஞ்சி டிராபியில் விளையாடி வருகின்றனர்.
இதனால் பிப்ரவரி இறுதி வாரத்திலேயே ஐபிஎல் ஃபீவர் ரசிகர்களிடையே தொடங்கிவிடும். கடந்த சீசனில் சாம்பியன் பட்டம் வென்றதால், முதல் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் தான் நடக்கவுள்ளது. இதனால் முதல் போட்டியிலேயே தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இதனிடையே சிஎஸ்கே அணிக்கு புதிய சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது.