IPL 2024 : சிஎஸ்கே பிளே-ஆஃப் போவதே கஷ்டம்.. இந்த வீரர் செய்த வேலையால் சிஎஸ்கே காலி
2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே – ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதே கஷ்டம் என சில ரசிகர்கள் ஆரூடம் கூறி வருகின்றனர். அதற்கு அவர்கள் காரணம் விசித்திரமானது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த ஜேசன் ராய் 2024 ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார்.
ஜேசன் ராய் இதற்கு முன்பு எப்போதெல்லாம் ஐபிஎல் தொடரில் பங்கேற்காமல் விலகினாரோ அப்போதெல்லாம் சிஎஸ்கே அணி பிளே – ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் மோசமான தோல்விகளை சந்தித்தது. இதை வைத்து தான் மீம்ஸ் தயாரித்து தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் சிஎஸ்கே ரசிகர்கள்.
இதற்கு முன் 2020 ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் தொடரில் இருந்து விலகினார். அப்போது சிஎஸ்கே அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. மேலும், படுமோசமான தோல்விகளை சந்தித்து பெரும் விமர்சனத்துக்கு ஆளானது.
அடுத்து 2022 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த ஜேசன் ராய் அப்போதும் தொடரில் இருந்து விலகினார். அந்த முறையும் சிஎஸ்கே அணி பிளே – ஆஃப் செல்லவில்லை. ஜடேஜாவை கேப்டனாக நியமித்த சிஎஸ்கே அணி முதல் பாதியில் தோல்விகளை சந்தித்து பிளே – ஆஃப் வாய்ப்பை இழந்தது.
அதனை அடுத்து தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்று இருக்கும் ஜேசன் ராய் தொடருக்கு முன் விலகி இருக்கிறார். அதனால், சிஎஸ்கே அணி 2024 ஐபிஎல் தொடரிலும் பிளே-ஆஃப் செல்லாமல் போய் விடுமோ என ரசிகர்கள் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதில் மற்றொரு சுவாரசிய சம்பவமும் உள்ளது. ஜேசன் ராய் விலகிய முந்தைய இரண்டு தொடர்களிலும் அவர் இடம் பெற்று இருந்த அணி அந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 2020இல் டெல்லி கேபிடல்ஸ் அணி முன்னேறி இருந்தது. அதே போல 2022 ஆம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி கோப்பையை கைப்பற்றியது. அதே போல, இந்த முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.