IPL 2024 – மும்பை அணியின் பயிற்சி முகாம்.. புறக்கணித்த ரோகித் சர்மா, பும்ரா.. ஆடி போன MI நிர்வாகம்
ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அனியும் ஆர் சி பி அணியும் பலபரிட்சை நடத்துகிறது. இந்தத் தொடருக்கான பயிற்சியை ஒவ்வொரு அணிகளும் தொடங்கிவிட்டன. இந்த நிலையில் ஐந்து முறை கோப்பையை வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது மும்பையில் தங்களது பயிற்சி முகாமை தொடங்கியிருக்கிறது.
கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா மாற்றப்பட்ட விவகாரம் மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் அணியை விட்டு சென்ற ஹர்திக் பாண்டியாவை மீண்டும் அழைத்து கேப்டன் பதவி கொடுக்கப்பட்டதற்கு அணிக்கு உள்ளையே பல எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
இதுவரை ரோகித் சர்மாவோ? சூரியகுமார் யாதவோ? பும்ராவோ? ஒருமுறை கூட ஹர்திக் பாண்டியாவுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் பயிற்சி முகாமின் முதல் நாள் இன்று நடைபெற்றது. இன்னும் பத்து நாட்கள் தான் ஐபிஎல் போட்டிக்கு இருக்கிறது. இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா, தென்னாபிரிக்கா வீரர் கோயி*சே ஆகியோரை தவிர வேறு எந்த ஸ்டார் வீரரும் பயிற்சி முகாமில் பங்கு பெற வரவில்லை.
ஹர்திக் பாண்டியா மற்றும் மற்ற ஜூனியர் வீரர்கள் சிலர் மட்டும்தான் பயிற்சி முகாமுக்கு வந்திருந்தார்கள். மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்டார் வீரர்களான ரோகித் சர்மா, பும்ரா ஆகியோர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுகிறார்கள் என்பதால்தான் அந்த தொடர் முடிந்தவுடன் பயிற்சி முகாமை ஆரம்பிக்கலாம் என மும்பை இந்தியன்ஸ் அணி நினைத்தது.
ஆனால் தொடர் முடிந்து இரண்டு நாட்கள் ஆகியும் பும்ரா மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் பயிற்சி முகாமுக்கு வராதது அந்த அணி நிர்வாகத்தை கலக்கம் அடைய செய்திருக்கிறது. இதேபோன்று சூரிய குமார் யாதவும் இந்த பயிற்சி முகாமில் இடம் பெறவில்லை.அவர் தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடல் தகுதியை நிரூபிக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கிறார்.
அவருக்கு பிசிசிஐ பச்சை சிக்னல் கொடுத்தால் மட்டுமே அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியும். ஹர்திக் பாண்டியா கேப்டன் ஆனது அணியில் உள்ள ஸ்டார் வீரர்களுக்கு பிடிக்கவில்லை என்று ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் செய்திகள் வந்த நிலையில் தற்போது முதல் நாள் பயிற்சி முகாமில் பல வீரர்கள் பங்கேற்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.