ஐபிஎல் 2024 புள்ளிப் பட்டியல் – சிஎஸ்கே வைத்த ஆப்பு… மீள முடியாமல் தவிக்கும் ஆர்சிபி

2024 ஐபிஎல் தொடரின் புள்ளிப் பட்டியலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 9ஆம் இடத்தில் இருந்து முன்னேறி ஆறாம் இடத்தை பிடித்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணியை வீழ்த்தியதன் மூலம் அந்த அணி மூன்று இடங்கள் முன்னேறியது. இருந்தாலும் தோல்வி அடைந்த பஞ்சாப் கிங்ஸ் அணி ஐந்தாம் இடத்தில் இருக்கிறது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் இந்த நிலைக்கு காரணம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணி தோல்வி அடைந்தது தான். சிஎஸ்கே அணிக்கு எதிரான தனது முதல் ஐபிஎல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோல்வி அடைந்ததால் -0.779 நெட் ரன் ரேட் பெற்றது. தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியதன் மூலம் 2 புள்ளிகள் மற்றும் -0.180 நெட் ரன் ரேட் பெற்று ஆறாம் இடத்துக்கு வந்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
சிஎஸ்கே அணி 2 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் தான் உள்ளது. அதே 2 புள்ளிகள் பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி +1 நெட் ரன் ரேட் பெற்று முதல் இடத்தில் உள்ளது. சிஎஸ்கே அணி +0.779 நெட் ரன் ரேட் மட்டுமே வைத்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளும் ஒரு வெற்றி பெற்று 2 புள்ளிகள் பெற்ற போதும் மூன்று மற்றும் நானகம இடத்தை மட்டுமே பெற்றுள்ளன.