ஐபிஎல் – எந்த அணி அதிக முறை எதிரணி பேட்ஸ்மேனை சதம் அடிக்க விட்டார்கள் தெரியுமா?
ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு சீசனிலும் ஏதேனும் ஒரு வீரர் சதம் அடித்து விடுவார் ஒரு காலத்தில் டி20 கிரிக்கெட்டில் சதம் அடிப்பது கடினம் என்று நம்பப்பட்ட நிலையில், அதனை ஐபிஎல் பொய்யாக்கி இருக்கிறது. இந்த நிலையில் இதுவரை உள்ள ஐபிஎல் வரலாற்றில் எந்த அணி அதிக முறை எதிரணி பேட்ஸ்மேன்களை சதம் அடிக்க விட்டிருக்கிறது என்பதை நான் தற்போது பார்க்க இருக்கின்றோம்.
ஐபிஎல் தொடரில் ஒரு வீரர் சதம் அடிக்கிறார் என்றால் அது மைதானம் மற்றும் பவுலர்கள் திறன் ஆகியவற்றை சார்ந்து தான் இருக்கும். அந்த வகையில் இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்திருக்கும் அணி பெயரைக் கேட்டால் யாரும் நம்ப மாட்டார்கள்.
ஆம் மும்பை அணி தான் இதுவரை 12 முறை எதிரணி பேட்ஸ்மன்களை சதம் அடிக்க விட்டிருக்கிறது. மலிங்கா, பும்ரா போன்ற பவுலர்கள் இருந்தும் மும்பை அணி இந்த ரெக்கார்டை படைத்திருக்கிறது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கும் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இவர்கள் 11 முறை எதிரணி பேட்ஸ்மேன்களை சதம் அடிக்க விட்டிருக்கிறார்கள்.
இதற்கு காரணம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை கே கே ஆர் உடன் பகிர்ந்து இருப்பது ஆர்சிபி தான். ஆர்சிபியின் பந்துவீச்சு காலம் காலமாக மோசமாக தான் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் பெங்களூரு ஆடுகளம் பேட்டிங்கிற்கு ஏற்ற மைதானம். இதனால் அந்த அணி 11 முறை எதிரணி பேட்ஸ்மேன்களை சதம் அடிக்க விட்டிருக்கிறது.
இந்த பட்டியலில் நான்காவது இடத்தை ஹைதராபாத் அணி பெற்று இருக்கிறது. ஐதராபாத் அணி எதிரணி பேட்ஸ்மேன்களை 10 முறை சதம் அடிக்க விட்டிருக்கிறது. இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பது பஞ்சாப் அணி ஐபிஎல் வரலாற்றில் பஞ்சாப் அணி எட்டு முறை எதிரணி பேட்ஸ்மேன்களை சதம் அடிக்க விட்டிருக்கிறது.
இந்த பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்திருப்பது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. அவர்கள் இதுவரை ஏழு முறை எதிரணி பேட்ஸ்மேன்களை சதம் அடிக்க விட்டிருக்கிறார்கள். இந்த பட்டியலில் ஏழாவது இடத்தை பிடித்திருப்பது சிஎஸ்கே. இவர்கள் ஆறு முறை எதிரணி பேட்ஸ்மேன்களை சதம் அடிக்க விட்டிருக்கிறார்கள். இந்தப் பட்டியலில் எட்டாவது இடத்தை பிடித்திருப்பது டெல்லி அணி.
இவர்கள் ஐந்து முறை எதிரணி பேட்ஸ்மேன்களை சதம் அடிக்க விட்டு இருக்கிறார்கள். இந்த பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்திருப்பது குஜராத் அணி. இவர்கள் இரண்டு முறை எதிரணி பேட்ஸ்மேன்களை சதம் அடிக்க விட்டிருக்கிறார்கள். இதுவரை லக்னோ அணிக்கு எதிராக மட்டும் தான் யாரும் சதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.