ஈரான் மீண்டும் பாகிஸ்தான் மீது தாக்குதல் – அதிகரிக்கும் பதற்ற நிலை
பாகிஸ்தானின் பகுதிக்குள் ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்திய உள்ளதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதலில் ஜெய்ஷ் அல்-அட்ல் இயக்கத்தின் தளபதி இஸ்மாயில் ஷாபக்ஷ் மற்றும் சிலர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
2012-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஜெய்ஷ் அல்-அட்ல் இயக்கம் அடிக்கடி ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
ஏவுகணை தாக்குதல்
இந்நிலையில் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் செயல்படும் ஜெய்ஷ் அல்-அட்ல் இயக்கத்தினரை குறிவைத்து ஈரான் இராணுவம் கடந்த மாதம் ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தியது.
இதற்கு பதிலடியாக ஈரானின் தென்கிழக்கு பகுதியில் பாகிஸ்தானுக்கு எதிரான பிரிவினைவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் இராணுவம் தாக்குதல் நடத்தியது.
இதன் காரணமாக, இரு நாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் ஏற்பட்டது. எனினும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதில் அமைதி திரும்பி இருந்தது.
மீண்டும் பற்றம்
இந்த நிலையில் ஈரான் இராணுவம் மீண்டும் பாகிஸ்தானுக்குள் தாக்குதல் நடத்தியதியதில் ஜெய்ஷ் அல்-அட்ல் இயக்கத்தின் தளபதி இஸ்மாயில் ஷாபக்ஷ் மற்றும் சிலர் கொல்லப்பட்டதாக ஈரான் அரசு ஊடக தகவலை மேற்கோள் காட்டி ஈரான் இன்டர்நேஷனல் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனால் ஈரான் மற்றும் பாகிஸ்தான் இடையே மீண்டும் பற்றம் ஏற்பட்டுள்ளது.
ஈரானின் தென்கிழக்கு மாகாணத்தில் தீவிரமாக செயல்பட்டு வரும் ஜெய்ஷ் அல்-அட்ல் இயக்கத்தை பயங்கரவாத குழுவாக ஈரான் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.