இரும்புச்சத்து நிறைந்த ‘முருங்கைக் கீரை’ சட்னி ரெசிபி..!

அனைவரது வீட்டிலும் காலை உணவாக பெரும்பாலும் இருப்பது இட்லி, தோசை தான். பொதுவாக இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, துவையல் வகைகள் என இருக்கும்.

இவற்றை தவிர்த்து அதிக இரும்புச்சத்து கொண்ட முருங்கைக் கீரை வைத்து சட்னி செய்து சாப்பிட்டால் எப்படி இருக்கும். முருங்கைக் கீரையில் சட்னி செய்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்தால் அவர்கள் அதை விரும்பி சாப்பிடுவது மட்டுமல்லாமல் பல ஆரோக்கிய நன்மைகளையும் தருகின்றன.

தேவையான பொருட்கள் :

சட்னி செய்ய :

முருங்கைக் கீரை

தக்காளி – 1

மல்லி விதை – 1 ஸ்பூன்

கடலை பருப்பு – 1 ஸ்பூன்

சீரகம் – 1/2 ஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 3

பூண்டு – 4 பல்

கடலை எண்ணெய் – தேவையான அளவு

சட்னி தாளிக்க :

எண்ணெய்

கடுகு

கருவேப்பிலை

செய்முறை :

முதலில் முருங்கைக் கீரையை சுத்தமாக தட்டி விட்டு அதன் இலைகளை உருவி தனியாக எடுத்துவைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் ஒரு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மல்லி விதை, கடலை பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு ஆகியவற்றை சேர்த்து கிளறிவிடவும்.

அனைத்தும் பொன்னிறமாக சிவந்தவுடன் அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.

தக்காளி நன்கு சுருண்டு வந்ததும் நாம் உருவி வைத்துள்ள முருங்கை கீரையை சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.

முருங்கை கீரை நல்லா வதங்கியவுடன் அடுப்பை அணைத்து அவற்றை நன்கு ஆறவிடவும்.

முருங்கை கீரை ஆறியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் அனைத்தையும் போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கவும்.

குறிப்பு : இவற்றை அரைக்கும் போது கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அவற்றை நைசாக அரைத்து கொள்ளவும்.

அரைத்து முடித்தவுடன் அதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி சட்னிக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலக்கி கொள்ளவும்.

பிறகு அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து சிறிது எண்ணெய் விட்டு அது காய்ந்ததும் தேவையான அளவு கடுகு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்துக்கொள்ளவும்.

தற்போது ரெடி செய்து வைத்துள்ள சட்னியில் இந்த தாளிப்பை சேர்த்து கிளறினால் சுவையான இரும்புச்சத்து நிறைந்த ‘முருங்கைக் கீரை’ சட்னி ரெடி…

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *