பூக்கள் என்றாலே நடிகை சமந்தாவிற்கு அலர்ஜியா..? இந்த நோய் பற்றி விளக்கும் மருத்துவர்..!

பிரபல நடிகை சமந்தா ரூத் பிரபு தனக்கு பூக்கள் மீது இருக்கும் காதலையும், எந்த அளவு பூக்களை பிடிக்கும் என்பது குறித்தும் சமீபத்தில் வெளிப்படுத்தினார். ஆனால் அதே நேரம் தனக்கு பூக்களால் ஏற்படும் அலர்ஜி பற்றியும் நடிகை சமந்தா குறிப்பிட்டுள்ளார்.

இவர் தனது லேட்டஸ்ட் இன்ஸ்டா போஸ்ட்டில் பூச்சென்டுடன் இருக்கும் ஃபோட்டோவை ஷேர் செய்து ‘சில அழகான விஷயங்களை கண்டால் நம் மனதிற்குள் கலவை எண்ணங்கள் தோன்றும். ஆனால் அதற்காக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவது என்பது மிகவும் வருத்தமானது. பூக்கள் என்றால் யாருக்கு அலர்ஜி.? என கேட்டு சமந்தா பதிவிட்டுள்ள போஸ்ட் அவரது ரசிகர்களிடைய ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த போஸ்ட் மூலம் நடிகை சமந்தா பூக்களால் தனக்கு ஏற்படும் அலர்ஜி குறித்து வெளிப்படுத்தி இருக்கிறார்.

நடிகை சமந்தாவின் இந்த இன்ஸ்டா போஸ்ட் நெட்டிசன்கள் மத்தியில் வைரலானது. அழகிய பூக்கள் அலர்ஜியை ஏற்படுத்துமா என்ற கேள்வியும், குழப்பமும் பலருக்கும் எழுந்தது. இதனையடுத்து பூக்கள் அலர்ஜியை ஏற்படுத்துமா.? ஆம் என்றால் ஏன் சிலருக்கு பூக்கள் அலர்ஜியை ஏற்படுத்துகின்றன என்று நிபுணர்கள் கூறுவதை இங்கே பார்ப்போம்.

ஹைதராபாத்தை சேர்ந்த மூத்த மருத்துவ நிபுணரான டாக்டர் சோம்நாத் குப்தா கூறுகையில், பூக்கள் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் என்பது உண்மை தான். எதிர்பாராத வகையில் சில நபர்களுக்கு பூக்கள் அலர்ஜியை தூண்டும். இது தும்மல், அரிப்பு மற்றும் ரேஷஸ் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். பூக்களால் ஏற்படும் அலர்ஜிகான முக்கிய காரணம் பூக்களால் உற்பத்தி செய்யப்படும் மகரந்தம் என்றார். மகரந்தம் என்பது நுண்ணியது முதல், சற்றுப் பருமனானது ஆண் இனப்பெருக்க செல்களை கொண்ட ஒரு தூள் ஆகும். இது தாவரத்தின் இனப்பெருக்கத்தை எளிதாக்குகிறது என்றார் டாக்டர் குப்தா.

தொடர்ந்து பேசிய டாக்டர் குப்தா, மகரந்தத்தில் உள்ள புரதங்களுக்கு சிலரின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் பதிலின் விளைவே அலர்ஜி அறிகுறிகள் ஆகும். இந்த புரதங்கள் பூ வகைகளுக்கு இடையில் வேறுபடலாம், இது ஒவ்வாமை எதிர்வினைகளின் பன்முகத்தன்மைக்கு பங்களிக்கின்றன. பொதுவாக தீங்கு விளைவிக்காத மகரந்த புரதங்களை சிலருக்கு அவர்களது நோயெதிர்ப்பு அமைப்பு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் என தவறாக அடையாளம் காட்டுகிறது. முடிவில் இது ஹிஸ்டமின்ஸ் மற்றும் பிற கெமிக்கல் வெளியீட்டை தூண்டி அலர்ஜி அறிகுறிகளை ஏற்படுத்துகிறது என்றார்.

தாவரங்களின் பாலியல் இனப்பெருக்கத்திற்கு மகரந்தம் அவசியம். ஒவ்வொரு மகரந்த தூளிலும் கருத்தரிப்பதற்குத் தேவையான ஆண் கேமட்ஸ்கள் உள்ளன. இந்த சூழலில் பல பூக்கள் மகரந்தத்தை காற்றில் fertilisation-ற்காக வெளியிடுகின்றன, இதனால் இவை எளிதில் காற்றில் பரவுகின்றன. காற்றில் பரவும் இந்த மகரந்தத்தை உள்ளிழுப்பது அலர்ஜி ரியாக்ஷன்ஸ் ஏற்படுவதற்கான பொதுவான வழியாக இருக்கிறது என்று குப்தா விவரித்தார்.

மகரந்த தூள்களின் அளவு:

பூக்களால் ஏற்படும் அலர்ஜியை பொறுத்த வரை மகரந்தத் துகள்களின் அளவு முக்கியமானது. சிறிதாக மற்றும் எடை குறைவாக இருக்கும் மகரந்தத் துகள்களை, ஒருவர் தனது சுவாச மண்டலத்தில் ஆழமாக உள்ளிழுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும் இது ஒருவருக்கு அலர்ஜிக் ரியாக்ஷன் ஏற்படுவதற்கான வாய்ப்பை தீவிரப்படுத்துகிறது. அதே போல பூ மகரந்தத்தில் உள்ள புரதங்கள், சில உணவுகளில் காணப்படும் புரதங்களை ஒத்திருக்கும் போது Cross-reactivity ஏற்படலாம். இதனால் சிலர் இரண்டையும் வெளிப்படுத்தும் போது பூக்களால் அலர்ஜியை அனுபவிக்க நேரிடும் என்றார் டாக்டர் குப்தா.

வருடத்தின் சில சீசன்களில் சில பூக்கள் அதிக மகரந்தத்தை உற்பத்தி செய்கின்றன. இதுவும் சிலருக்கு அலர்ஜியை அதிகரிக்கலாம். பூக்களால் ஏற்படும் அலர்ஜிக்கு ஒருவர் எளிதில் பாதிக்கப்படுவதை தீர்மானிப்பதில் மரபணு காரணிகளும் பங்கு வகிக்கின்றன. அலர்ஜியை ஃபேமிலி ஹிஸ்ட்ரியாக கொண்ட நபர்களுக்கு பூக்களால் அலர்ஜி ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்று டாக்டர் குப்தா கூறினார்..

பிரபல நரம்பியல் நிபுணர் டாக்டர் சுதிர் குமார் பேசுகையில் பூக்களால் ஏற்படும் லேசான அலர்ஜி என்றால் மூக்கு ஒழுகுதல், மூக்கடைப்பு, கண்களில் நீர் வடிதல், தும்மல் மற்றும் ரேஷஸ் உள்ளிட்டவை அறிகுறிகளாக வெளிப்படுகின்றன. அதே நேரம் தீவிர அலர்ஜி ஏற்பட்டால் மூச்சுத்திணறல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்ட கடும் அறிகுறிகள் ஏற்படுகின்றன. உடனடி சிகிச்சை எடுத்தால் பூக்களால் ஏற்படும் அலர்ஜி அறிகுறிகளுக்கு நிவாரணம் கிடைக்கும் என்றார்.

தடுப்பு நடவடிக்கை:

பூக்களால் ஏற்படும் அலர்ஜியை தவிர்க்க உச்சகட்ட மகரந்தப் பருவங்களில் வெளியே செல்வதை தவிர்க்கலாம். ஏர் ப்யூரிஃபையரை பயன்படுத்துவது மற்றும் தனிப்பட்ட சுகாதாரத்தை கடைப்பிடிப்பது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற மருத்துவர் குப்தா அறிவுறுத்தியுள்ளார்.

சிகிச்சை.!

ஆன்டிஹிஸ்டமின்ஸ் மற்றும் நாசல் கார்டிகோஸ்டீராய்ட்ஸ் உள்ளிட்ட அலர்ஜிக்கான மருந்துகள் பூக்களால் ஏற்படும் அலர்ஜியிலிருந்து நிவாரணம் அளிக்கும். தீவிர அலர்ஜி ஏற்படும் சந்தர்ப்பங்களில் allergen immunotherapy சிகிச்சை அளிக்கப்படலாம் என்றார் டாக்டர் குப்தா.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *