AI மூலம் ஆபத்தா..? உண்மையை உடைத்த ஐபிஎம் சந்தீப்..!!

ஜெனரேட்டிவ் AI அறிமுகம் பல துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வரும் வேளையில், சில தொழில்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் டெக் துறை வல்லுனர்கள் இதை மாறுபட்ட கோணத்தில் பார்க்கிறார்கள்.
ஐபிஎம் நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்காசியாவின் நிர்வாக இயக்குநர் சந்தீப் படேல் கூறுகையில், AI உண்மையில் வேலைவாய்ப்பு எண்ணிக்கையை நீக்குவதை விட, அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று தான் நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.
சந்தீப் படேல் செய்தி நிறுவனமான IANS உடனான உரையாடலில், தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் குறித்துப் பேசுகையில், AI தொழில்நுட்பத்தின் மூலம் வேலைவாய்ப்பில் மொத்தமாகவே நிகர எண்ணிக்கை உயர்த்தும் என்று தான் உறுதியாக நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.
மக்கள் புதிய வேலை வாய்ப்புகளை எதிர்கொள்ளும் போது பெரும்பாலான நேரத்தில் அச்சத்தை வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார். இணையத்தின் வருகையின் போதும் இது நடந்தது, உதாரணமாக இப்போது செய்தித்தாள் அச்சிடுதல் போன்ற சில துறைகளில் வேலைகள் குறைவதற்கு வழிவகுத்தது.
ஆனால் அதே நேரத்தில் வெர் டிசைனிங், டேட்டா சையின்ஸ், டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் வெப் பப்ளிஷிங் போன்ற முற்றிலும் புதிய வேலைகள் உருவாக்கியது.
இந்தப் புதிய துறைகளில் தற்போது பல கோடி பேர் பணியாற்றி வருகின்றனர். இந்தச் சூழலில் AI கண்டு அஞ்சும் மக்கள் தங்களுடைய திறன் மேம்படுத்திக்கொள்ளப் படேல் வலியுறுத்தினார்.
தற்போது, 46% இந்திய நிறுவனங்கள், ஆட்டோமேஷன் மற்றும் AI கருவிகளுடன் தங்கள் ஊழியர்களுக்குத் தீவிரமாகப் பயிற்சி அளித்து வருகின்றன அல்லது ரீஸ்கில்லிங் செய்து வருகின்றன.
ஆனால் இப்போது இருக்கும் பெரும் சவாலானது, ஒரு பெரிய பணியாளர்கள் கூட்டத்திற்குப் பயிற்சி அளிப்பது தான். எல்லோரும் CODER அல்லது AI டெவலப்பராகவோ இருக்க முடியாது. இந்த வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப கற்றுக்கொள்வது அவசியம்.