பல தடைகளை தாண்டி வெளியான அயலான் வெற்றியடைந்ததா? விமர்சனம் இதோ!

சிவகார்த்திகேயன் நடிப்பில் 7 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட அயலான் திரைப்படம் பல தடைகளை தாண்டி இந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி உள்ளது. குழந்தைகளை கவரும் வகையில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம், பெரியவர்களின் கவருமா என்பதை பார்க்கலாம்.

இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்ட படம் அயலான். ஏலியனை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் உடன் ரகுல் ப்ரீத் சிங், பானுபிரியா, யோகி பாபு, கருணாகரன், இஷா கோபிகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, நிரோஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சொந்த ஊரில் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்ட சிவகார்த்திகேயன் சில காரணங்களால் சென்னை வருகிறார். அதேபோல் வில்லன் நோவா கேஸ் தயாரிக்க சக்தி வாய்ந்த பொருள் ஒன்றை பயன்படுத்துகிறார். அது பூமிக்கு மட்டுமில்லாமல் வேற்றுகிரவத்திற்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால் ஏலியன் வருகிறது. இவர்கள் மூவரும் இணைக்கும் கதையே அயலான்.

ஏலியன் படம் என்றால் ஹாலிவுட் படங்களில் வருவது போல் கொடூர உருவம், ராட்சச சக்தி என இல்லாமல். குழந்தைகளை கவரும் வகையில் குட்டி ஏலியனை உருவாக்கியுள்ளனர். அதில் ஒரு அளவு வெற்றியும் கண்டுள்ளனர். இந்த ஏலியன் வில்லனின் சதியை முறியடிக்கிறதா? அதற்கு சிவகார்த்திகேயன் எப்படி உதவுகிறார்? என திரைக்கதை நகர்கிறது.

ஏலியன் பூமிக்கு வந்த பிறகு சிவகார்த்திகேயன் குழுவுடம் அது இணையும் காட்சிகள் ரசிக்கும் படியுள்ளன. ஆனால் அந்த காட்சிகளை இன்னும் சுவாரஸ்யமாகவும், வாய்விட்டு சிரிக்கும்படியும் அமைத்திருக்கலாம். முதல் பாதி ஒரு அளவிற்கு நகைச்சுவையுடன் நகர்கிறது. அதை குழந்தை ரசிகர்களுக்காக ஒரு முறை பார்க்கலாம். ஆனால் இரண்டம்பாதி சோதிக்கிறது.

அயலான் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் சிறப்பாக அமைந்திருக்கின்றன. அதற்காக அதிக மெனக்கிடல்களை தொழில்நுட்ப கலைஞர்கள் கொடுத்துள்ளனர். குறிப்பாக அந்த ஏலியன் தோற்றம், அது செய்யும் சின்ன சின்ன சாகசம் கட்சிதமாக உள்ளன.

திரைப்படங்களில் கார்பரேட் முதலாளி என எடுத்துகொண்டாலே வழக்கமாக ஒரு பெண் தோழி, துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு முக்கியத்துவம் இருக்காது. இதிலும் அப்படியே அமைந்திருக்கிறது. ஏலியன் வரும் Space Ship சாதாரணமாக பறக்கிறது, வில்லன் செயலால் நகரத்தின் சலைகள் வெடிக்கின்றன, இதையெல்லாம் மக்கள் பார்க்கவில்லையா என்ற கேள்விகளை ரசிகர்களுக்கு எழுப்புகின்றது. அத்துடன் இரண்டாம் பாதியின் காட்சிகள் பார்வையாளர்களை சலிப்படைய வைக்கின்றன.

நடிகர்களை பொறுத்தவரை சிவகார்த்திகேயன் ஏழ்மை வீட்டில் இருந்து வரும் இளைஞாக அவரின் ட்ரேட் மார்க் நடிப்பையே கொடுத்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங் சினிமா சம்பரதாய நாயகியாகவே வருகிறார். கருணாகரன், யோகிபாபு ஆகியோர் தங்களின் எக்ஸ்பிரஷன் மற்றும் சின்ன சின்ன கவுண்டர் வசனங்களால் சிரிக்க வைக்க முயற்சித்துள்ளனர். அத்துடன் பானுபிரியா இருக்கிறார் என்பதே படம் முடியும்போது மறந்துவிடும் அளவிலேயே காட்சிகள் உள்ளன. இவரை தவிர இதில் எதற்கு இஷா கோபிகர் என்றே தோன்ற வைக்கிறது. அவரை அழைத்து வந்து Rich girl-லாக்கி உள்ளனர். அவர் ஓடுகிறார், வருகிறார், ஒரு இடத்தில் இரண்டு Kick செய்கிறார் அவ்வளவே. இது பெரிய படம் என்று காட்டவதற்காக, இந்த நடிகர்களை தேர்வு செய்துள்ளனர் என்றே தோன்றுகிறது.

 

நடிகர்களை தவிர ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய இசையின் மூலம் இது பழைய படம் இல்லை என்பதை காட்ட முயற்சி செய்துள்ளார். அதேபோல் ஒளிப்பதிவும், முத்துராஜின் புரடெக்‌ஷன் டிசைனும் படத்திற்கு பலம்.

அயலான் படம் 2016 வேலைகள் தொடங்கப்பட்டு 2017-ல் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியது. அப்போதே வெளியாகியிருந்தால் இயற்கை விவசயம் என்ற கான்செப்ட் புதிதாக இருந்திருக்கும். ஆனால் இப்போது விவசாயிகலே எங்களை தயவு செய்து விட்டுவிடுங்கள். இல்லையென்றால் எங்களுடன் வந்து விவசாயம் செய்துவிட்டு படம் எடுங்கள் என்று கூறும் நிலைக்கு வந்துவிட்டது. இந்த நிலையில் அயலான் வெளியாகியுள்ளது. இதனால் சில காட்சிகளை வெட்டி தூக்கியுள்ளது நன்றாகவே தெரிகிறது.

ஒட்டுமொத்தத்தில் அயலான் படத்தில் ஏலியன் இருப்பதால் குழந்தைகள் கொண்டாடும் வெற்றி என சொல்லிக்கொள்ளலாம்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *