மீண்டும் வருகிறதா எஃப் 1 கார் பந்தயம்? இந்த முறை சென்னையில் நடக்க வாய்ப்பு இருக்குதா?

இந்தியாவில் ஃபார்முலா 1 கார்பந்தயம் மீண்டும் வரப்போவதற்கான அறிகுறி தென்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் தற்போது துவங்கப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே நடந்த ஃபார்முலா 1 கார்பந்தய இடம் மட்டுமல்லாமல் புதிதாக ஒரு இடத்தில் இதை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் விளையாட்டு துறையை வளர்க்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இப்படியாக குஜராத் மாநில அரசு தற்போது புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி அம்மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்காக குஜராத் விளையாட்டு துறை அம்மாநிலத்தில் எஃப்1 கார் பந்தய டிராக்கை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

அதன்படி குஜராத் இன்டர்நேஷனல் பைனான்ஸ் டெக் சிட்டி (கிப்ட்) என்ற பெயரில் எப்1 கார்பந்தயத்தை நடத்த ஏற்ற மைதானத்தை உருவாக்க நாம் மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இப்படியாக இந்த மைதானம் உருவாக்கப்பட்டால் உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் என்ற மைதானத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது எப்1 கார் பந்தைய மைதானமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது குஜராத் மாநில விளையாட்டு துறை இதற்கான முன்னெடுப்பை எடுத்து எஃப்1 கார்பந்தயம் நடத்துவதற்கான ஒரு பாதைகளை அமைக்கவும் மைதானத்தை கட்டமைக்கவும் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இதற்காக ரூபாய் 5,000 முதல் 10,000 கோடி வரை நிதி ஒதுக்கப்படும் என தெரிகிறது. தற்போது இது வெறும் ஆரம்ப கட்ட சூழ்நிலையில் தான் இருக்கிறது. இது 2028-ம் ஆண்டு தான் பயன்பாட்டிற்கு வரும் என தெரிகிறது.

இதற்கு முன்னர் இந்தியாவில் புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் என்ற இடத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை எஃப் 1 கார் பந்தைய போட்டிகள் நடந்து வந்தன0 ஆனால் அதை தொடர்ந்து நடத்துவதற்கு பல்வேறு போக்குவரத்து சிக்கல்கள், நிர்வாக பிரச்சனைகள், அதிக செலவு உள்ளிட்ட காரணங்கள் இருந்தது. இதனால் இந்த போட்டி தொடர்ந்து நடத்த முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதன் காரணமாக இந்தியாவில் கார் பந்தயப் போட்டிகள் நடக்காமல் இருந்தது. இந்நிலையில் கோயம்புத்தூரில் உள்ள கரி மோட்டார் வே மற்றும் மெட்ராஸ் மோட்டார் ரேஸ் டிராக் ஆகிய பகுதிகளில் மோட்டார் கார் பந்தயப் போட்டிகளை நடத்த பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வந்தன. ஆனால் இந்த மைதானங்களில் எப் 1 கார் பந்தயத்தை நடத்தும் அளவிற்கான வசதிகள் இல்லை என கூறப்படுகிறது.

குஜராத் மாநில அரசு அம்மாநிலத்தில் உள்ள காந்திநகர் பகுதியில் கிஃப்ட் சிட்டி என்ற பெயரில் புதிதாக எஃப் 1 கார் பந்தயத்தை நடத்தும் அளவிற்கு ஒரு மோட்டார் ஸ்போர்ட்ஸ் மைதானத்தை உருவாக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இதற்கான விளம்பரம் மாநிலத்தில் உள்ள செய்தித்தாள்களில் இடம் பெற்றுள்ளது. இந்த கிஃப்ட் சிட்டி என்பது குஜராத் மாநிலத்தில் உள்ள ஸ்பெஷல் எக்னாமிக் ஜோன் என்ற பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்தப் பகுதியில் நடக்கும் போட்டிகளுக்கான வரி சலுகை என்பது கிடைக்கும் இதுபோக கார்களை இறக்குமதி செய்வது கார்களுக்கான ஸ்பான்சர் பெறுவதிலும் வரிச்சலுகைகள் கிடைக்கும். இதனால் இங்கு போட்டிகளை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் போட்டியில் பங்கேற்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இதன் காரணமாகவே சிறப்பு பொருளாதார மண்டலம் உள்ள பகுதியில் இந்த மைதானம் அமைக்கப்படுகிறது.

இந்த கிஃப்ட் சிட்டி பகுதியில் எஃப்1 கார்பந்தய மைதானம் அமைக்க ஏற்கனவே குஜராத் அரசு கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் லண்டனிலிருந்து சில வல்லுநர்களை அழைத்து வந்து ஆய்வு செய்தது. அவர்களைப் பகுதியை ஆய்வு செய்து தற்போது இங்கே மோட்டார் பந்தய மைதானத்தை அமைப்பதற்கான திட்டமிடலில் ஈடுபட்டுள்ளனர். திட்டமிட்டபடி எல்லாம் நடந்தால் 2028 ஆம் ஆண்டு அங்கு மோட்டார் கார் பந்தயம் மைதானம் ரெடியாகிவிடும்.

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *