இந்தியாவில் வலம் வரும் ராட்சத காருக்கு சொந்தக்காரர் இவர்தானா!.. சரவணா ஸ்டோர் ஓனரோ, அம்பானியோ கிடையாதுங்க!!
சரவணா ஸ்டோர் ஓனர் லெஜண்ட் சரவணாவோ அல்லது இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியோ, இவர்கள் யாரிடமும் இல்லாத வாகனம் ஒன்றை கேரளாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவர் வாங்கி இருக்கின்றார்.
இந்த காரின் மீது அவர் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கும் வீடியோக் காட்சிகளே தற்போது வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
சமீபத்தில் ராட்சத (Gigantic) உருவம் கொண்ட ஃபோர்டு (Ford) பிக்-அப் டிரக் வாகனம் ஒன்று இந்தியாவில் வலம் வந்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதை உறுதிப்படுத்தும் விதமாக அந்த கார் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் கார்களுக்கு மத்தியில் நிற்பது போன்ற படங்கள் வெளியாகின.
மிக முக்கியமாக மஹிந்திரா எக்ஸ்யூவி 700 எஸ்யூவி (Mahindra XUV700 SUV) காருக்கு அருகில் அந்த ஃபோர்டு கார் நிற்கும் படம் இணையத்தில் மிக அதிகமானோரால் பகிரப்பட்டது. காரணம், அந்த காரை அது ஓர் குழந்தையை போல தென்பட செய்துவிட்டது. இந்தியாவில் மிகவும் பிரமாண்டமான உருவ தோற்றத்தில் விற்பனைக்குக் கிடைக்கும் கார் மாடல்களில் ஒன்றே எக்ஸ்யூவி700.
இந்த கார் மாடலையே தனக்கு அருகில் நின்றுக் கொண்டிருந்தபோது அது குழந்தையைபோல் தென்பட செய்துவிட்டது. அந்த அளவிற்கு ராட்சத தோற்றத்திலேயே ஃபோர்டு கார் இருந்தது. இது, கேரளா மாநிலம், கொச்சியில் உள்ள ஒருவருக்கு சொந்தமானதே என பலரால் கூறப்பட்டது. ஆனால், அதன் உரிமையாளர் யார் என்கிற விபரம் வெளி வரவில்லை.
இந்த நிலையிலேயே, அதன் உரிமையாளர் யார் என்கிற விபரம் வெளியுலகிற்கு தெரிய வந்திருக்கின்றது. கேரளாவைச் சேர்ந்த மிகப் பெரிய பிசினஸ் மேன்களில் பாபி செம்மனூர் என்பவரும் ஒருவர் ஆவார். இவருக்கு சொந்தமானதே அந்த ராட்ச தோற்றம் கொண்ட ஃபோர்டு கார் ஆகும்.
இவரிடத்தில் ஏற்கனவே பல ஆடம்பர மற்றும் அரிய வகை கார்கள் பயன்பாட்டில் உள்ளன. அந்தவகையில், ரோல்ஸ் ராய்ஸ் கார்கூட இவரிடத்தில் இருக்கின்றது. மேலும், இவர் தன்னுடைய ரோல்ஸ் ராய்ஸ் காரை தன்னுடைய கெஸ்ட்களின் வாடகை வாகனமாகவும் பயன்படுத்தி வருகின்றார். இத்தகைய மாபெரும் பணக்காரரே ராட்சத உருவம் கொண்ட ஓர் ஃபோர்டு காரை இந்தயாவிற்கு இம்போர்ட் (இறக்குமதி) செய்திருக்கின்றார்.
அவர் இறக்குமதி செய்திருப்பது ஃபோர்டு எஃப்650 பிக்-அப் ட்ரக் வாகனமாகும். இந்தியாவில் விற்கப்படும் மினி லாரிகளுக்கு இணையான பிரமாண்ட தோற்றம் கொண்டதே இந்த பிக்-அப் டிரக் ஆகும். இந்த வாகனத்தையே ஓர் மேடையாகக் கொண்டு அதன் மீது ஏறி நடனமாடி இருக்கின்றார் தொழிலதிபர் பாபி செம்மனூர்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்த வாகனத்தை துபாயில் இருந்து பாபி செம்மனூர் கொண்டு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபோன்று வெளிநாட்டு வாகனங்களை ‘கார்னெட்’ (Carnet) எனும் தனித்துவமான அனுமதியின் வாயிலாக இந்தியாக் கொண்டு வர முடியும் என்பது குறிப்பிட்ததகுந்தது.
தனது பிரமாண்ட தோற்றத்திற்காக உலக அளவில் அறியப்படும் வாகன மாடல்களில் ஃபோர்டு எஃப்650 பிக்-அப் டிரக்கும் ஒன்றாகும். அமெரிக்கர்கள் மத்தியில் பிக்-அப் டிரக்கிற்கு நல்ல வரவேற்பு உண்டு. நீளம் 4,965 மிமீட்டரையும், அகலம் 1,890 மிமீட்டரையும், உயரம் 1,755 மிமீட்டரையும் இந்த பிக்-அப் டிரக் கொண்டிருக்கின்றது.
இந்த அளவு மிகப் பெரிய அளவில் பிக்-அப் டிரக் அல்லது எந்த காரையும் இந்தியாவில் பார்க்க முடியாது. இதனால்தான் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் சில பிரமாண்ட தோற்றம் கொண்ட கார்கள் அதற்கு முன்னால் ஓர் குழந்தையைப் போல காட்சியளிக்கின்றன. இந்த ராட்சத தோற்றம் கொணட் பிக்-அப் டிரக்கின் இயக்கத்திற்கு பெரிய பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.
இரண்டு விதமான எஞ்சின் ஆப்ஷனில் இந்த வாகனம் உலக சந்தையில் விற்கப்படுகின்றது. 7.3 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்சின் மற்றும் 6.7 லிட்டர் வி8 டீசல் எஞ்சின் ஆகியவையே அவை ஆகும். இதன் பெட்ரோல் மோட்டார் 350 பிஎஸ் மற்றும் 635 என்எம் டார்க்கையும், டீசல் மோட்டார் 330 பிஎஸ் 1015 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.