இந்தியாவில் வலம் வரும் ராட்சத காருக்கு சொந்தக்காரர் இவர்தானா!.. சரவணா ஸ்டோர் ஓனரோ, அம்பானியோ கிடையாதுங்க!!

சரவணா ஸ்டோர் ஓனர் லெஜண்ட் சரவணாவோ அல்லது இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியோ, இவர்கள் யாரிடமும் இல்லாத வாகனம் ஒன்றை கேரளாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவர் வாங்கி இருக்கின்றார். இந்த காரின் மீது அவர் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கும் வீடியோக் காட்சிகளே தற்போது வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
சமீபத்தில் ராட்சத (Gigantic) உருவம் கொண்ட ஃபோர்டு (Ford) பிக்-அப் டிரக் வாகனம் ஒன்று இந்தியாவில் வலம் வந்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதை உறுதிப்படுத்தும் விதமாக அந்த கார் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் கார்களுக்கு மத்தியில் நிற்பது போன்ற படங்கள் வெளியாகின.
மிக முக்கியமாக மஹிந்திரா எக்ஸ்யூவி 700 எஸ்யூவி (Mahindra XUV700 SUV) காருக்கு அருகில் அந்த ஃபோர்டு கார் நிற்கும் படம் இணையத்தில் மிக அதிகமானோரால் பகிரப்பட்டது. காரணம், அந்த காரை அது ஓர் குழந்தையை போல தென்பட செய்துவிட்டது. இந்தியாவில் மிகவும் பிரமாண்டமான உருவ தோற்றத்தில் விற்பனைக்குக் கிடைக்கும் கார் மாடல்களில் ஒன்றே எக்ஸ்யூவி700.
இந்த கார் மாடலையே தனக்கு அருகில் நின்றுக் கொண்டிருந்தபோது அது குழந்தையைபோல் தென்பட செய்துவிட்டது. அந்த அளவிற்கு ராட்சத தோற்றத்திலேயே ஃபோர்டு கார் இருந்தது. இது, கேரளா மாநிலம், கொச்சியில் உள்ள ஒருவருக்கு சொந்தமானதே என பலரால் கூறப்பட்டது. ஆனால், அதன் உரிமையாளர் யார் என்கிற விபரம் வெளி வரவில்லை.
இந்த நிலையிலேயே, அதன் உரிமையாளர் யார் என்கிற விபரம் வெளியுலகிற்கு தெரிய வந்திருக்கின்றது. கேரளாவைச் சேர்ந்த மிகப் பெரிய பிசினஸ் மேன்களில் பாபி செம்மனூர் என்பவரும் ஒருவர் ஆவார். இவருக்கு சொந்தமானதே அந்த ராட்ச தோற்றம் கொண்ட ஃபோர்டு கார் ஆகும்.