ஹோம் லோன் இன்சூரன்ஸ் எடுப்பது கட்டாயமா? எப்படி பயன்படும்..?

இந்தியாவில் ஒரு வீடு வாங்கும் பொழுது வீட்டின் உரிமையுடன் தொடர்புடைய அபாயங்களிலிருந்து பாதுகாக்க கூடிய பல்வேறு விதமான இன்சூரன்ஸ் ஆப்ஷன்களை கடன் பெறுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிப்பவர்கள் ப்ராபர்ட்டி இன்சூரன்ஸ் போன்ற குறிப்பிட்ட இன்சூரன்ஸ் திட்டங்கள் மூலமாக பலன் பெறலாம். ஹோம் லோன் இன்சூரன்ஸ் போன்ற வேறு சில இன்சூரன்ஸ் திட்டங்களும் உள்ளன.

கடன் ஒப்பந்தத்தில் உள்ள விதிகள் மற்றும் நிபந்தனைகளை கடன் பெறுபவர்கள் கவனமாக படித்து புரிந்து கொள்ள வேண்டும். இந்த சொத்தில் அவர்கள் செய்யும் முதலீட்டை பாதுகாப்பதற்கு தேவையான இன்சூரன்ஸ் வகைகள் மற்றும் கூடுதல் காப்பீட்டு ஆப்ஷன்களை தேர்வு செய்வதற்கு இது அவர்களுக்கு உதவ கூடும்.

ஹோம் லோன் இன்சூரன்ஸ்:

இறப்பு போன்ற எதிர்பாராத சூழ்நிலைகளின் காரணமாக லோன் பேமெண்ட்களை செலுத்த தவறும் வீட்டு உரிமையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டதே ஹோம் லோன் இன்சூரன்ஸ். இந்த இன்சூரன்ஸ் திட்டத்தை ஒருவர் ஹோம் லோன் எடுக்கும் பொழுதோ அல்லது ஹோம் லோன் நடந்து கொண்டிருக்கும் எந்த ஒரு சமயத்திலும் எடுக்கலாம். லோன் தொகை, லோன் கால அளவு, கடன் பெற்றவரின் வயது மற்றும் ஆரோக்கியம் மற்றும் தேர்வு செய்யக்கூடிய கவரேஜ் வகையைப் பொறுத்து இன்சூரன்ஸ் திட்டத்திற்கான செலவு மாறுபடும். ஹோம் லோன் இன்சூரன்ஸ் என்பது கட்டாயமானது அல்ல. கடன் வழங்குனர்கள் கடன் பெறுபவர்களை இதற்கு வற்புறுத்த கூடாது.

ப்ராப்பர்ட்டி இன்சூரன்ஸ்:

ப்ராப்பர்ட்டி இன்சூரன்ஸ் பெறுவது இந்தியாவில் வீட்டு கடன்களுக்கு கட்டாயம் என பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் எந்த இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து கவரேஜ் பெற வேண்டும் என்ற முழு சுதந்திரமும் கடன் பெறுபவர்களுக்கு வழங்கப்படுகிறது.

உதாரணமாக, அடமானத்தில் உள்ள சொத்தினை தீ விபத்து, வெள்ளம், நிலநடுக்கம் மற்றும் பிற இயற்கை சீற்றங்களுக்கு எதிராக இன்சூர் செய்ய வேண்டும் என்பதை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கட்டாயமாக்கி உள்ளது. இந்த இன்சூரன்ஸ் வங்கி மற்றும் கடன் பெறுபவர் ஆகிய இருவரையும் இணைத்து பெறப்பட வேண்டும். இன்சூரன்ஸுக்கான செலவு முழுவதையும் கடன் பெறுபவர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஹோம் லோன்களுடன் கிடைக்கும் இன்சூரன்ஸ் வகைகள் :

எஸ்பிஐ ஹோம் லோன் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி, எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி டேர்ம் இன்சூரன்ஸ் ப்ராடக்டுகளை வழங்குகிறது. இந்த ப்ராடக்டுகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பாலிசி ஹோல்டருக்கான பொருளாதார காப்பீட்டை வழங்குகிறது. பாலிசி காலத்தின்போது இன்சூர் செய்த நபர் இறந்து விடும் பட்சத்தில், இறப்பு பலன் பெனிஃபீஷியரிக்கு வழங்கப்படுகிறது. டேர்ம் இன்சூரன்ஸ் தேர்வுக்குறியது, கட்டாயமானது அல்ல.

மறுபுறம், எஸ்பிஐ ஜெனரல் ப்ராப்பர்ட்டி இன்சூரன்ஸ் வழங்குகிறது. இது தனியார் வீடுகளுக்கு எதிர்பாராத விதமாக ஏற்படும் சேதங்கள் மற்றும் இயற்கை சீற்றங்களுக்கு எதிரான காப்பீட்டை வழங்குகிறது. எஸ்பிஐ வங்கியில் ஹோம் லோன் பெறுவதற்கு ப்ராப்பர்ட்டி இன்சூரன்ஸ் கட்டாயமாகும்.

ஹோம் லோன் இன்சூரன்ஸ் வாங்க வேண்டுமா? வேண்டாமா என்ற முடிவு தனிநபரை பொறுத்தது. எந்த மாதிரி ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பும் இதில் உள்ள நன்மை மற்றும் தீமைகளை அலசி ஆராய்ந்த பிறகு எடுக்கவும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *