ஷோரூம் திறப்பில் கூட சாதனையா… யமஹா நிறுவனம் ப்ளூ ஸ்கொயர் ஷோரூமை இதுவரை எவ்வளவு திறந்திருக்கு தெரியுமா?

வாகன உற்பத்தி நிறுவனங்கள் வாகன தயாரிப்பிலும், வாகன விற்பனையிலும் சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கின்ற இந்தவேளையில், பிரபல இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான யமஹா இந்தியாவில் ஷோரூம்களை திறப்பதில் சாதனையைப் படைத்துக் கொண்டிருக்கின்றது. இதுகுறித்து வெளியாகி இருக்கும் லேட்டஸ்ட் தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குல் போகலாம்.

உலக புகழ்பெற்ற இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் யமஹாவும் ஒன்று. இந்த நிறுவனம் இந்தியாவில் ஷோரூம் திறப்பதில் புதிய மைல்கல்லை எட்டியிருக்கின்றது. அதாவது, ஷோரூம் திறப்பில் புதிய சாதனையை அது படைத்திருக்கின்றது. நிறுவனம் இதுவரை 300 ப்ளூ ஸ்கொயர் ஷோரூம்களைத் திறந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது நிறுவனத்தின் பிரீமியம் தர இரண்டு சக்கர வாகனங்களுக்கான பிரத்யேக ஷோரூம் ஆகும். இதனையே விரிவாக்கம் செய்வதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது யமஹா நிறுவனம். இந்த நிலையிலேயே 300 ஷோரூம்களை தரமான மைல்கல்லை யமஹா எட்டி இருக்கின்றது. யமஹா நிறுவனம் கால் ஆஃப் தி ப்ளூ எனும் கேம்பைனை கடந்த 2018 ஆம் ஆண்டிலேயே இந்தியாவில் முதல் முறையாகத் தொடங்கியது.

இதன் ஒரு பகுதியாக முதல் ப்ளூ ஸ்கொயர் ஷோரூமையும் அது நாட்டில் திறந்து வைத்தது. 2019 ஆம் ஆண்டிலேயே முதல் யமஹா ப்ளூ ஸ்கொயர் ஷோரூம் திறக்கப்பட்டது. தற்போது ஐந்தாண்டுகளை அது தொட்டுவிட்டது. இதற்குள்ளாகவே நிறுவனம் 300 ப்ளூ ஸ்கொயர் ஷோரூம்களை திறந்திருக்கின்றது.

இந்த ஷோரூம் பெயருக்கு ஏற்ப நீல நிற தீமிலேயே அலங்கரிக்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிறம் ஷோரூமிற்கு பிரீமியம் லுக்கை வழங்கும் விதமாகவும் இருக்கின்றது. யமஹா நிறுவனம் அதன் ப்ளூ ஸ்கொயர் ஷோரூம் வாயிலாக ஏரோக்ஸ் 155, ஆர்15 வி, ஆர்15எஸ் வி3, எம்டி-15 வி2, எஃப்இசட்-எஃப்ஐ 4.0, எஃப்இசட்எஸ்-எஃப்ஐ 3.0, எஃப்இசட்-எஃப்ஐ 3.0 மற்றும் எஃப்இசட்-எக்ஸ் ஆகிய இரண்டு சக்கர வாகன மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இவற்றின் வரிசையிலேயே சமீபத்தில் ஆர்3 மற்றும் எம்டி-03 ஆகிய மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு இணைக்கப்பட்டன. ஆமாங்க, இவையும் யமஹாவின் ப்ளூ ஸ்கொயர் ஷோரூமிலேயே விற்பனைக்குக் கிடைக்கின்றன. இதுதவிர, நிறுவனத்தின் ஹைபிரிட் அம்சம் கொண்ட ஸ்கூட்டர் மாடல்களான ஃபஸ்ஸினோ 125 எஃப்ஐ ஹைபிரிட், ரே இசட்ஆர் 125 எஃப்ஐ ஹைபிரிட் மற்றும் ரே இட்ஆர் ஸ்ட்ரீட் ரேல்லி 125 எஃப்ஐ ஹைபிரிட் ஆகியவை விற்கப்படுகின்றன.

இதுபோன்று வாகனங்கள் மட்டுமின்றி பிராண்டின் பிரீமியம் தர ரைடர்களுக்கான பாதுகாப்பு கவசங்கள் விற்பனைச் செய்யப்படுகின்றன. அந்தவகையில், ஹெல்மெட், கையுறை, ரைடிங் ஜாக்கெட் மற்றும் வாகனங்களுக்கான பிரீமியம் தர அணிகலன்கள் சிலவும் விற்கப்படுகின்றன. இத்தகைய பலதரப்பட்ட நிலைகளில் செயல்படும் ப்ளூ ஸ்கொயர் ஷோரூமையே அதிகளவில் நம் நாட்டில் யமஹா திறந்துக் கொண்டிருக்கின்றது.

மேலும், இந்த 300 ப்ளூ ஸ்கொயர் ஷோரூம்களில் 129 தென்னிந்தியாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன குறிப்பிடத்தகுந்தது. குறிப்பாக, தமிழகத்தில் நிறுவனத்தின் ப்ளூ ஸ்கொயர் ஷோரூம்கள் அதிகளவில் பயன்பாட்டில் உள்ளன. சென்னை போன்ற முதல் நிலை நகரத்தில் மட்டுமின்றி திருச்சி, மதுரை மற்றும் கோவை போன்ற இரண்டாம் நிலை நகரங்களிலும் அந்த ஷோரூம் செயல்பட்டு வருகின்றன.

தென்னிந்தியாவைத் தொடர்ந்து இந்தியாவின் கிழக்கு பகுதியிலேயே அதிக எண்ணிக்கையில் ப்ளூ ஸ்கொயர் ஷோரூம்கள் உள்ளன. சுமார் 81 ப்ளூ ஸ்கொயர் ஷோரூம்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றது. இதற்கு அடுத்தபடியாக 54 ப்ளூ ஸ்கொயர்கள் மேற்கிந்தியாவிலும், 37 ப்ளூ ஸ்கொயர் ஷோரூம்கள் வட இந்தியாவிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. விரைவில், அதாவது, அடுத்து வரும் மாதங்களில் இந்த எண்ணிக்கையை மேலும் யமஹா கூட்டும் என நம்பப்படுகின்றது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *