தூக்கத்தில் பேய் கனவு சுபமா? அல்லது அசுபமா? அர்த்தம் இதோ
நீங்கள் தூங்கும் போது உங்களுக்கு பேய் கனவு வந்தால் அதற்கு என்ன அர்த்தம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தூங்கும் போது கனவு
பொதுவாக கனவு வருவது ஒவ்வொருவருக்கும் இயல்பான ஒன்றே… நாம் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் போது கனவுகள் வருகின்றது.
இந்த கனவுகள் எதிர்கால நிகழ்வுகளை நோக்கி நம்மைச் சுட்டிக்காட்டுகின்றது என்று கூறப்படுகின்றது. சில கனவுகள் நம்மை சிந்திக்க வைத்தாலும், சில கனவுகள் பயங்கரமானதாக இருக்கும்.
அதிலும் பேய்கள் கனவில வருவது பயத்தை ஏற்படுத்துவதுடன், தூக்கத்தையும் கெடுக்கின்றது. அவ்வாறு விசித்திரமாக பேய் கனவு வந்தால் அதற்கு அர்த்தத்தை தெரிந்து கொள்ளலாம்.
கனவில் பேய்கள் சுபமா? அசுபமா?
கனவில் பேய் அல்லது பயமுறுத்தும் உருவங்களை பார்ப்பது நல்லதல்ல என்று சாஸ்திரங்களில் கூறப்படுவதுடன், அத்தகைய கனவுகளைப் பார்ப்பது மோசமானதாகக் கருதப்படுவதுடன், மோசமான அறிகுறியாகவும் இருக்கின்றது. மேலும் பேய்கள் எதிர்மறை ஆற்றலின் சின்னமாக இருக்கின்றது.
அடிக்கடி பேய் கனவு வந்தால், மனரீதியாக பலவீனமாக இருக்கின்றீர்கள் என்று அர்த்தமாம். மேலும் நீங்கள் உணர்ச்சிவசப்படும் போது அல்லது யாராவது உங்களை காயப்படுத்தும் போதும் இந்த பேய் கனவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எதிர்காலத்தை குறித்து சிந்திக்கும் போது இந்த பேய் கனவுகள் வருமாம். மேலும் பேய் உங்களைத் தாக்குவது போன்று கனவு கண்டால், உங்களை எதையும் சாதிக்கவிடாமல் ஏதோ ஒன்று தடுக்கின்றது என்றும் வெற்றிக்கு வெகு தொலைவில் இருப்பீர்கள் என்றும் அர்த்தமாம்.