ஆரம்பமே இப்படியா…? – 2024ன் முதல் மாதம் ஓர் அலசல்
எத்தனை படங்கள் வந்தால் என்ன அவற்றில் எத்தனை படங்கள் வெற்றி பெறுகிறது, வசூல் ரீதியாக லாபம் தருகிறது என்பது மட்டுமே கடைசியாக தேவைப்படுகிறது.100 கோடி முதல் 600 கோடி வசூல் என வந்தாலும் அதில் எவ்வளவு லாபம் என்பதே கேள்வி. மொத்த வசூல் எவ்வளவு என்பது பெரிதல்ல, வரிகள், இதர செலவினங்கள், கமிஷன் தொகைகள் என கழிக்க வேண்டியதை எல்லாம் கழித்து கடைசியாக எவ்வளவு லாபம் தந்தது என்பதை மட்டும்தான் பார்க்க வேண்டும். ஆனாலும், சில நடிகர்களின் ரசிகர்கள் மொத்த வசூல் தொகையே ஏதோ ஒரு சாதனை வசூல் என பரப்பி விடுகிறார்கள். அதெல்லாம் எதற்கும் பயனில்லை.
பல கோடி முதலீடு செய்த தயாரிப்பாளரும், படத்தை வாங்கியவர்களும் நஷ்டமில்லாமல் ஏதோ ‘நாலு காசு’ சம்பாதித்தோம் என்பதே ஒரு படத்திற்கான பெருமை.இந்த 2024ம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்தில் சுமார் 17 படங்கள் வெளியாகியுள்ளன. தியேட்டர்களில் 16 படங்களும், ஓடிடி தளத்தில் ஒரு படமும் வெளியாகியுள்ளது.பொங்கல் ரிலீஸ்ஜனவரி மாதம் என்றாலே பொங்கல் வெளியீடுகள் முக்கியமானவை. இந்த வருடப் பொங்கலுக்கும் சில முக்கியமான படங்கள் வெளிவந்தன. தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’, சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’, விஜய் சேதுபதி நடித்த ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’, அருண் விஜய் நடித்த ‘மிஷன் சாப்டர் 1’ ஆகிய படங்கள் வெளியாகின.
இவற்றில் ‘கேப்டன் மில்லர், அயலான்’ ஆகிய படங்கள் உலக அளவில் 75 கோடி வசூலைக் கடந்ததாகச் சொன்னார்கள். அவ்வளவு வசூலைக் கடந்தாலும் அந்தப் படங்கள் லாபகரமான படங்களாக அமைந்தா என்பது குறித்து கோலிவுட்டில் சந்தேகத்தை எழுப்புகிறார்கள். தமிழக வசூலைப் பொறுத்தவரயில் அவற்றின் வியாபாரத்துடன் ஒப்பிடும் போது இரண்டு படங்களுமே இதுவரையில் லாபத்தைத் தரவில்லை என்கிறார்கள். ‘மிஷன் சாப்டர் 1’ படம் ஓரளவிற்கு வசூலித்த நிலையில், ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படம் என்ற ஒரு படம் வந்ததா என்பது கூட பலருக்குத் தெரியாமல் போனது மிகவும் ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது.படங்களே வெளியாகாத வெள்ளிக்கிழமைபொங்கலுக்கு முந்தைய முதல் வெள்ளிக்கிழமையான ஜனவரி 5ம் தேதி ‘அரணம், எங்க வீட்ல பார்ட்டி, கும்பாரி, உசுரே நீதான்டி’ ஆகிய படங்கள் வெளிவந்தன.