அது யாருப்பா, நம்ம ZOHO ஸ்ரீதர் வேம்பு-வா இது.. அடையாளமே தெரியலையே..!!

தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஸ்டார்ட்அப் நிறுவனமாக திகழும் ZOHO, தனது வர்த்தகத்தை MENA பகுதியில் விரிவாக்க முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. சோஹோ-வின் சேவைகள் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பெரிய அளவில் பலன் கொடுக்கும் வேளையில் ஸ்ரீதர் வேம்பு பல்வேறு முக்கிய பணிகளுக்காக 3 நாள் சுற்று பயணமாக சவுதி சென்றுள்ளார்.
இந்த பயணித்தில் மிகவும் முக்கியமாக ஸ்ரீதர் வேம்பு சவுதி அரேபியாவின் ரியாத் மற்றும் ஜெட்டாவில் இரு டேட்டா சென்டர்களை நிறுவும் திட்டத்தை அறிவித்தார். இதை தொடர்ந்து LEAP நிகழ்ச்சியில் உரையாற்றினார், இந்த நிலையில் நேற்று மாலை சவுதியில் இருந்து சென்னை திரும்பினார்.
ZOHO சிஇஓ ஸ்ரீதர் வேம்பு சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில் எடுத்துக் கொண்ட படங்களை பகிர்ந்துள்ளார். அந்த நாட்டின் பாரம்பரியத்தை கௌரவிக்கும் வகையில் ஸ்ரீதர் வேம்பு சவூதி அரேபியாவின் தேசிய ஆடையான தவாப்பை அணிந்திருந்தார்.
ஸ்ரீதர் வேம்பு பகிர்ந்துள்ள படங்களில் அவர் ஒரு வெள்ளை நிற நீண்ட தவாப்பை அணிந்திருந்தார். இது சவூதி அரேபிய ஆண்கள் உடுத்தும் ஆடையாகும். அத்துடன் பாரம்பரியமான ஷெமாக் எனும் தலைப்பாகையையும் ஸ்ரீதர் வேம்பு அணிந்திருந்தார். அவர் சென்னை திரும்பும் முன்னதாக அவரது சகாக்கள் இந்த ஆடையை அவருக்கு அணிவித்து ஒரு குரூப் போட்டோவையும் எடுத்துக் கொண்டனர்.
எனது சகாக்கள் எனக்கு சவூதியின் தேசிய உடையான தவாபை வாங்கிக் கொடுத்தனர். நேற்று மாலை ரியாத்தில் இரவு உணவு, சென்னை திரும்புவதற்கு முன் எடுத்தப் படம் என்று பதிவின் தலைப்பை இட்டிருந்தார்.
இந்த பதிவுக்கு 30,000 பார்வைகளைக் குவித்தது. ஸ்ரீதர் வேம்புவின் நண்பர்கள் மற்றும் பின்தொடர்பவர்களிடமிருந்து பல கமெண்ட்களும் பதிவாகியுள்ளன.
படத்தைப் பார்த்தவுடன், இந்தப் படத்தில் ஸ்ரீதர் எங்கே இருக்கிறார்? நான் வேஷ்டி அணிந்த ஸ்ரீதரை பார்த்துப் பழகிவிட்டேன் என்று ஹார்வெஸ்டிங் ஃபார்மர் நெட்வொர்க்கின் நிறுவனர் ருசித் கார்க் பதிவிட்டுள்ளார்.
ஒரு பயனர், ஷேக் ஸ்ரீதர் வேம்பு போல் தெரிகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பதிவர், அனைத்து பாரம்பரிய உடைகளும் உங்களுக்கு நன்றாக பொருந்தும் சார்” என்று குறிப்பிட்டார்.
இதற்கிடையில், இந்த ஆண்டு ஜனவரியில், ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு ஒரு நாள் முன்னதாக, ஸ்ரீதர் வேம்பு அயோத்திக்கு சென்றிருந்தார். அவருடன் அவரது தாய், சகோதரர் மற்றும் அவரது மனைவி இருந்தனர்.
நாங்கள் நேற்று மாலை அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் இருந்து வெளியே வந்தபோது, காலையில் கோயிலுக்குள் செல்வதற்காக பெரும் கூட்டம் கூடியிருந்ததைக் கண்டோம். அவர்கள் இரவு முழுவதும் குளிரில் காத்திருக்கப் போகிறார்கள். அவர்களது பக்தியைக் கண்டு நான் நெகிழ்ச்சியுடன் கண்ணீர் விடுகின்றேன். அவர்களின் பக்தியில் பகவான் ஸ்ரீ ராமர் நிறைந்துள்ளார் என்று அவர் எக்ஸ்-இல் ஒரு இடுகையில் எழுதிய ஸ்ரீதர் வேம்பு தனது குடும்பத்தினருடன் ஒரு படத்தையும் பகிர்ந்துள்ளார்.
வேம்பு தனது பதிவில், தனது தாயார் ஸ்ரீராமரின் வாழ்நாள் பக்தர் என்றும், அயோத்தியில் இருந்ததற்கு மிகவும் புண்ணியம் செய்தவர் என்றும் தெரிவித்திருந்தார்.