திருமண வாழ்க்கை சிறக்கணுமா? அப்போ படுக்கையறையில் இதையெல்லாம் வைக்காதீங்க
பொதுவாகவே திருமணம் ஆகிய புதிதில் கணவன் மனைவி பரஸ்பர ஒற்றுமையுடனும் அன்பாகவும் இருப்பது இயல்புதான்.
ஆனால் காலம் செல்ல செல்ல திருமண உறவில் பல்வேறு சண்டைகள் கருத்து வேறுபாடுகள் எழ ஆரம்பிக்கின்றது.
இது ஆண்களை விட பெண்களை அதிகமாக மனதளவில் பாதிக்கின்றது. திருமணத்தின் பின்னர் ஒரு பெண்ணுக்கு கணவன் தான் எல்லாம் என்ற நிலை ஏற்பட்டுவிடுகின்றது.
இப்படியிருக்க கணவன் மனைவிக்கு இடையில் ஏற்படும் சண்டைகள் இருவரையுமே வலுவாக பாதிக்கும்.
இது வீட்டில் உள்ள மற்றவர்களையும் அதிகமாக பாதிக்கிறது. குறிப்பாக குழந்தைகள் இதனால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
ஆனால் படுக்கையறை தொடர்பான சில வாஸ்து குறிப்புகளை பின்பற்றினால் இந்த பிரச்சனைகளை இலகுவில் தீர்க முடியும் என வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
படுக்கையறையில் வைக்கக் கூடாதவை
பொதுவாக படுக்கையறையில் கருப்பு பொருட்களை வைப்பது அதிகமாக எதிர்மறை ஆற்றல்களை ஈர்க்கும். இதனால் மனதில் குழப்பநிலை மற்றும் கோப உணர்வு அதிகரிக்க காரணமாகின்றது.
மேலும், படுக்கையறையைப் பார்க்கும்போது மனம் அமைதியடைய வேண்டும். படுக்கையறை அலங்கோலமாக இருப்பதால் மனதில் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.
கணவன்-மனைவி இடையே ஒற்றுமையும் குறையும். இதனால் படுக்கையறையை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.
படுக்கையறையில் படுக்கைக்கு அடியில் எந்தப் பொருட்களையும் வைக்கவே கூடாது. குறிப்பாக படுக்கைக்கு அடியில் தண்ணீர் வைக்க கூடாது இதனால் எதிர்மறை எண்ணங்கள் அதிகரித்து சண்டைகளும் மன குழப்பங்களும் அதிகரிக்கும்.
படுக்கையறையில் சோகமான புகைப்படங்கள், பொம்மைகள், ஓவியங்கள் போன்றவற்றை வைக்க கூடாது. இதனால் தம்பதிகளுக்கு இடையே உள்ள இடைவெளி அதிகரிப்பதோடு கணவன் மனைவிக்கு இடையில் ஈர்ப்பு இல்லாமல் போய்விடும்.
படுக்கையறையில் தாவரங்களை வைப்பதும் தம்பதிகளிடையே பிரிவினையை ஏற்படுத்தும். என வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
படுக்கையறையில் எலக்ட்ரானிக் பொருட்களான டிவி, லேப்டாப் போன்றவற்றை வைப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் கணவன்-மனைவி இடையே சரியான இணக்கம் இல்லாமல் போகுமாம்.
மேலும் பல்வேறு மனநல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இவற்றை பின்பற்றுவதன் மூலம் கணவன் மனைவிக்கு இடையில் ஒற்றுமையையும் ஈர்ப்பும் அதிகரிக்கும்.