உடல் பருமனால் பிரச்சனையா? இந்த பழங்களை சாப்பிடும் முன் இதை படிங்க
இன்றைய காலகட்டத்தில் அனைவருமே தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார்கள்.
உடல் எடை அதிகரிக்காமல் இருக்க பலரும் பல வித முயற்சிகளையும் மேற்கொள்கிறார்கள். எனினும் இன்று பரவலாக இருக்கும் தவறான உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை பழக்கங்களால் உடல் எடை மிக வேகமாக அதிகரித்து விடுகிறது. உடல் எடையை கட்டுப்படுத்த பலர் பலவித நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். சிலர் ஜிம் செய்கிறார்கள், சிலரோ கடுமையான உணவு கட்டுப்பாடுகளையும் மேற்கொள்கிறார்கள். பல சமயங்களில் இவற்றாலும் தேவையான விளைவுகளை பெற முடிவதில்லை
இன்னும் சில எளிய மற்றும் இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இயற்கையான வழிகளில் உடல் எடையை குறைக்க நாம் முயற்சிக்கும் போது எந்த வித பக்கவிளைவுகளும் நமக்கு ஏற்படாது. உடல் எடையை குறைகக் முற்படும் போது நமது உணவில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.
பொதுவாக தொப்பை கொழுப்பை குறைக்கவும் (Belly Fat) உடல் எடையை குறைக்க கார்போஹைட்ரேட்ஸ், கொழுப்புகள் ஆகியவற்றை தவிர்த்து அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் உடல் எடையை குறைகக் நினைப்பவர்கள் சில பழங்களை உட்கொள்ளக் கூடாது என்பது பலருக்கு தெரிவதில்லை. அனைத்து பழங்களும் உடல் எடையை குறைக்க பயன்படுவதில்லை.
சில பழங்களில் கலோரி அளவு அதிகமாக இருப்பதால் (High Calorie Fruits) இவற்றால் உடல் எடை அதிகமாவதும் உண்டு. ஏனெனில் இந்த பழங்களில் இனிப்பு தன்மையும் கலோரிகளும் அதிகமாக உள்ளன.