பிரதமர் மோடியின் ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் பயணம் தனிப்பட்ட முறையிலானதா? ஆர்டிஐயில் அடுக்கடுக்கான கேள்விகள்!

பிரதமர் மோடி ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோவில்களில் மேற்கொண்ட பயணம் தனிப்பட்ட முறையிலானதா அல்லது அலுவல் ரீதியிலானதா என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, ஜனவரி 20, 21 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோவில்களில் தரிசனம் செய்தார். இந்நிலையில் பிரதமர் அலுவலக பொது தகவல் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளார். அதில்,

“பிரதமரின் ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் பயணம் தனிப்பட்ட முறையிலானதா அல்லது அலுவல் ரீதியானதா? தனிப்பட்ட முறையிலானது என்றால் அவர் பயணித்த விமானம், ஹெலிகாப்டர், கார்களுக்கான செலவுகளை மத்திய அரசு செய்ததா அல்லது மாநில அரசு செய்ததா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அந்த விண்ணப்பத்தில், பிரதமர் மோடியின் இந்த பயணம் தனிப்பட்ட ரீதியானதாக இருந்தால், எந்த கட்டணமும் செலுத்தாமல் அரசு வாகனங்களை எந்த சட்ட விதிகளின் கீழ் அவர் பயன்படுத்தினார் எனவும், சாதாரண பொதுமக்களும் கோவில்களுக்குச் செல்ல இது போல அரசு வாகனங்களை பயன்படுத்த முடியுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், தனிப்பட்ட பயணமாக இருந்தால் இந்த போக்குவரத்து செலவுகளை அவரிடம் இருந்து வசூலிக்க அரசு திட்டமிட்டுள்ளதா எனவும் இல்லை என்றால் ஏன் என விளக்கம் தர வேண்டும் எனவும் விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *