அது என்ன ஹர்திக் பாண்டியா மட்டும் ஸ்பெஷலா? குத்திவிட்ட ரோகித் சர்மா.. பதறிபோன பிசிசிஐ விளக்கம்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் இந்த சூழலில் நட்சத்திர வீரர்கள் பலர் இந்த தொடரில் விளையாடாமல் ஐபிஎல் தொடருக்காக பயிற்சி செய்து வருவது செய்திருக்கிறது குறிப்பாக இந்தியாவிலிருந்து மன சோர்வு ஏற்பட்டுவிட்டது என்று கூறி தொடரிலிருந்து வெளியேறிய இசான் கிசான் தற்போது ரஞ்சி கோப்பையில் விளையாடாமல் இருக்கிறார்.

இதனால் பிசிசிஐ நிர்வாகிகள் உள்நாட்டு போட்டிகளில் விளையாடாமல் ஐபிஎல் தொடருக்காக வீரர்கள் தயாரானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து இருந்தது. மேலும் இந்திய கிரிக்கெட் அணிக்கான ஒப்பந்தமும் ரத்து செய்யப்படும் என்றும் கூறியிருந்தது.

இதனால் இசான் கிஷன் தற்போது உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் விளையாட தயாராகி வருகிறார்.

இந்த நிலையில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கடைசியாக உலக கோப்பை தொடரில் விளையாடினார். அப்போது காயம் காரணமாக பாதியில் வெளியேறிய பாண்டியா தற்போது எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்காமல் தற்போது பயிற்சி செய்து வருகிறார்.

இந்த நிலையில் ரஞ்சிக்கோப்பையில் விளையாடாமல் பயிற்சி செய்யும் வீரர்களுக்கு பிசிசிஐ எச்சரிக்கை கொடுத்திருக்கும் போது ஹர்திக் பாண்டியா மட்டும் தனியாக பயிற்சி செய்ய அனுமதிப்பது ஏன் என்று ரோகித் சர்மா பிசிசிஐ நிர்வாகிகளுடன் கேள்வி எழுப்பியதாக தெரிகிறது.

இந்த நிலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ள பி சி சி ஐ நிர்வாகி ஹர்திக் பாண்டியாவுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளது.

அதில் ஹர்திக் பாண்டியாவால் இனி டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட முடியாது. அவருடைய உடல் தகுதி அதற்கு ஏற்ற வகையில் இல்லை. இது குறித்து ஹர்திக் பாண்டியாவை இனி தாம் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட முடியுமா என தெரியவில்லை என்று விளக்கம் அளித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் ஐசிசி தொடர்களில் ஹர்திக் பாண்டியாவின் முழு உடல் தகுதி இந்திய அணிக்கு தேவை என்பதால் தான் ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் ஹர்திக் பாண்டியாவுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது என்று விளக்கம் அளித்துள்ளது.

மேலும் சில வீரர்களால் இனி டெஸ்ட் கிரிக்கெட் விளையாட முடியாது என்று பிசிசிஐக்கு தெரியும் என்பதால் சிலருக்கு இந்த விதிவிலக்கு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற இளம் வீரர்கள் குறைந்தபட்சம் மூன்று நான்கு ரஞ்சிப் போட்டியில் விளையாடினால் மட்டுமே ஐபிஎல் விளையாடுவதற்கு தகுதி பெறுவார்கள் என்றும் பி சி சி ஐ தெரிவித்துள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *