அப்படின்னா அவ்வளவும் காப்பிதானா?.. மணிரத்னம் படங்களைத் தோலுரித்துக் காட்டிய பிரபலம்..
ரீமேக், டப்பிங், காப்பிகேட், இன்ஸ்பிரேஷன் என்று பல வகைகளில் ஒரு படம் இன்னொரு படமாக உருமாற்றம் அடைகிறது. அந்த வகையில் காப்பிகேட் என்ற வகை படங்களில் ஒரு சிலவற்றை இப்போது பார்ப்போம்.
தமிழ்த்திரை உலகில் காப்பி அடித்து எடுக்கப்பட்ட படங்கள் பல உள்ளன. அவற்றில் அட்லியை சொல்வார்கள். ஆனால், மணிரத்னம் எடுக்கப்பட்ட செக்கச்சிவந்த வானம் படம் நியூ வேர்ல்டு என்ற கொரியன் படத்தில் இருந்து அப்படியே காப்பி அடித்து எடுக்கப்பட்டது.
அண்ணாவின் முதல் படம் ஓர் இரவு. இந்தப் படத்தின் கதையையே அப்படி யாரும் யோசிக்கவில்லை. மொத்த படமும் சாயங்காலம் 6 மணிக்கு ஆரம்பித்து விடியகாலை 6 மணிக்குள் என்ன நடந்ததுன்னு எடுக்கப்பட்ட படம். 50களில் இப்படிப்பட்ட வித்தியாசமான படம் என்று எதுவும் வரவில்லை.
அதே போல கலைஞர் ஒரு டெம்ப்ளேட்டாக பராசக்தியைக் கொடுத்து அவருக்கு செட்டாக்கி விட்டார். அண்ணன் தங்கை என்றாலே பராசக்தியில் ஆரம்பித்து பாசமலர் வரை சிவாஜிக்கும் மட்டும் தான் என்ற அளவில் வந்துவிட்டார். அப்படி எம்ஜிஆருக்கே ஒரு சென்டிமென்ட் கிடைக்கவில்லை. அதனால் அவர் அம்மா பிள்ளை சென்டிமென்ட்டுக்குப் போய்விட்டார். அம்மா, பிள்ளை சென்டிமென்ட் என்றாலே அது எம்ஜிஆர் படம் தான். அதே போல அண்ணன், தங்கை பாசம் என்றால் அது சிவாஜி படம் தான் என்று ஆகி விட்டது.
தி காட் பாதர் படமும், ஒன்ஸ் அபான் எ டைம் இன் அமெரிக்கா என்ற 2 ஆங்கிலப் படங்களையும் காப்பி அடித்து எடுக்கப்பட்டது தான் நாயகன் படம். தி காட் பாதர் படத்தில சிசிலி என்ற தீவில் ஹீரோ சிறுவனாக இருந்த போது போலீஸ் அதிகாரியைக் கொன்னுட்டு, வேற ஒரு ஊருல போயி டான் ஆகி விடுவார். அதே போல நாயகன் படத்துல தூத்துக்குடியில் உள்ள ஒரு போலீஸ் ஆபீசரைக் கொன்னுட்டு மும்பையில் போய் டான் ஆகி விடுவார் கமல்.
மேற்கண்ட தகவலை பிரபல எழுத்தாளர் கிருஷ்ணவேல் என்பவர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.