சிமென்ட் தரையை அழகுபடுத்த ‘லேமினேட்’ முறை சாத்தியமா?

வீடுகளில் ஒவ்வொரு பகுதியும் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக, பல்வேறு ஏற்பாடுகள் செய்கிறோம். இதற்காக, உள் அலங்கார ரீதியாக பல்வேறு வழிமுறைகளை கடைபிடிக்கிறோம்.

புதிதாக கட்டும் நிலையில் உள் அலங்கார வழிமுறைகளை பயன்படுத்தி வீட்டை அழகுபடுத்துவது ஒரு ரகம். ஆனால், ஏற்கனவே கட்டப்பட்டு பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருக்கும் வீட்டை தற்போதைய தேவைக்கு ஏற்ப அழகுபடுத்தவும் வழிமுறைகள் வந்துள்ளன.குறிப்பாக, வீடுகளை காட்டிலும் வணிக ரீதியான பயன்பாட்டில் இருக்கும் கட்டடங்களில் இதற்கான தேவை அதிகமாக உள்ளன. உதாரணமாக, 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடத்தை அலுவலகமாக பயன்படுத்தி இருப்போம். அந்த கட்டடம் கட்டப்பட்ட போது, பதிகற்கள் அந்த அளவுக்கு பிரபலம் ஆகி இருக்காது.

ஆனால், தற்போது அனைத்து கட்டடங்களிலும் பதிகற்களே தரையை அலங்கரிக்கின்றன. இதனால், பழைய கட்டடத்தில் பதிகற்கள் அமைக்க விரும்புகின்றனர். சில கட்டடங்களில் மட்டுமே இது நடைமுறையில் சாத்தியமாகும். பல இடங்களில் பழைய கட்டடங்களில் சிமென்ட் தரையை உடைத்து பதிகற்கள் அமைப்பதில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.

இதற்கு தீர்வாக பதிகற்கள் போன்ற பளபளப்பை தரும் வேறு பொருட்களை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.இதற்கு உதவும் வகையில், புளோர் லேமினேட் பொருட்கள் சந்தைக்கு வந்துள்ளன. இதை பயன்படுத்த மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. சிமென்ட் தரையை எந்த விதத்திலும் சேதப்படுத்தாமல், புளோரிங் கிரேடு மைக்கா விரிப்பை பதிக்கலாம். இதை ஒட்டுவதற்கு பிரத்யேக பசை விற்பனை செய்யப்படுகிறது.

சிமென்ட் தரைகள் மட்டுமல்லாது, பழைய மொசைக் தரைகள், மங்கலான பதிகற்கள் உள்ள இடங்களுக்கும் இவ்வகை லேமினேட் ஷீட்களை பயன்படுத்தலாம். ஒரு அறை என்ன நோக்கத்துக்காக பயன்படுத்தப்படுகிறதோ அதற்கு ஏற்ற வடிவங்கள், வண்ணங்களில் லேமினேட் ஷீட்கள் விற்கப்படுகின்றன. பதிகற்களுக்கு ஆகும் செலவுடன் ஒப்பிடும்போது, இது பெரிய செலவாக இருக்காது. வழக்கமான முறையில் சுத்தப்படுத்துவதிலும் பெரிய பிரச்னைகள் இருக்காது.பி.வி.சி., மற்றும் மரங்களின் கலவையுடன் வினைல் தரையையும் உருவாக்கும் போது, இது WPC என அழைக்கப்படுகிறது, மேலும் இது கல் (கால்சியம் கார்பனேட்) மற்றும் பி.வி.சி ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்பட்டால், அது SPC என அழைக்கப்படுகிறது.இப்போது கிடைக்கக்கூடிய மேம்பட்ட நுட்பங்கள் காரணமாக, வினைல் தரையையும் தாள்கள் கடின மரம், பளிங்கு அல்லது கல் தரையையும் ஒத்திருக்கும்.

வினைல் தரையையும் முதன்மையாக பாலிவினைல் குளோரைடு (பி.வி.சி) உருவாக்கியுள்ளதுவினைல் மிகவும் நீடித்த பொருள் மற்றும் அதை சரியாக நிறுவி பராமரித்தால், அது 10-20 ஆண்டுகள் நீடிக்கும். மேலும், வினைல் ஓடுகள் தனித்தனி துண்டுகளாக வருவதால் அவை சேதமடையும் போது அவற்றை எளிதாக மாற்றலாம். வினைல் தாள் தரையையும் குளியலறையில் ஒரு நல்ல தேர்வாகக் கொண்டுள்ளது என்கின்றனர் கட்டுமானத்துறை வல்லுனர்கள்.கவனத்திற்கு…• வினையல் மேட் பல தடிமனில், பல அளவுகளில், பல நிறங்களில் கிடைக்கிறது. நம் வசதிக்கேற்ப எவ்வளவு சிறிய அளவிலும் வாங்கிக்கொள்ளலாம்• இதன் வடிவமும், நிறமும் சலித்துப்போனால், உடனடியாக வேறு வடிவத்தில், நிறத்தில் மாற்றிக்கொள்ளக்கூடிய அளவில் தான் இதன் விலை இருக்கிறது• இந்த லேமினேட் ஷீட்களை பழைய மேஜை, கதவுகள், அடுப்பு மேடைகளில் கூட அதன் பசையைக் கொண்டு ஒட்டிக்கொள்ளலாம்; மிக எளிதானது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *