குளிர்காலத்தில் தலையில் பொடுகு பிரச்சனை அதிகமாக உள்ளதா.? இந்த வீட்டு வைத்தியம் செய்து பாருங்கள்.!?
பொடுகு தலையில் அதிகரிப்பதற்கு நம் அன்றாட உணவு பழக்க வழக்கங்களும் ஒரு காரணமாகும். குளிர்காலத்தில் பொடுகு பிரச்சனையில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து பார்க்கலாம்?
குளிர்காலத்தில் வெப்பநிலை உடலில் குறைவதால் தலையில் இறந்த செல்கள் உருவாகி பொடுகு பிரச்சனை அதிகரிக்கிறது. மேலும் மன அழுத்தம், தூக்கமின்மை, அதிகப்படியான எண்ணெய் சுரப்பு, ஈஸ்ட் தொற்று போன்றவற்றாலும் பொடுகு தொல்லை, தலையில் அரிப்பு அதிகமாகின்றது. வீட்டில் உள்ள ஒரு சில பொருட்களை வைத்து சரி செய்யலாம்
1. ரோஸ்மேரி – இதை தண்ணீரில் கலந்து 15 முதல் 20 நிமிடம் தலையில் தேய்த்து ஊற வைத்து குளித்தால் பொடுகு பிரச்சனை நீங்கும்.
2. ஆப்பிள் சீடர் வினிகர் – தண்ணீரில் கலந்து தலையில் தேய்த்து 10 நிமிடம் வரை ஊற வைக்க வேண்டும். பின்பு ஷாம்பு தேய்த்து குளிக்க வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
3. தயிர் – இறந்த செல்களை நீக்கும் அருமருந்து தயிர். இதை தலையில் தேய்த்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை விரைவில் குணமாகும்.
4. ஆலிவ் எண்ணெய் – தினமும் தேங்காய் எண்ணெய்க்கு பதில் தலைக்கு ஆலிவ் எண்ணெய் தேய்த்து வர பொடுகு
சரியாகும்.
5. வயிற்றில் அதிகப்படியான அமிலம் இருந்தாலும் பொடுகு தொல்லை அதிகரிக்கும். இதனால் வீட்டில் செய்த சாப்பாடு கஞ்சி, ஊறுகாய், புளிப்பான உணவுகள் சாப்பிட்டு வந்தாலும் பொடுகு தொல்லை நீங்கும்.