பேய் இருக்கிறதா… இல்லையா..? | மகிழ்ச்சி – 15
விகள் அட்டகாசம் செய்யும் ஒரு சினிமா. அக்கம்பக்கம் நூற்றுக்கும் மேலான மனிதர்கள் அமர்ந்திருக்கிறார்கள்.
திரைக்குப் பின்னே எதுவும் கிடையாது என்பதும், ஒளிக்கற்றை மூலமே பேய் உருவங்கள் தோன்றுகிறது என்பதும் சர்வநிச்சய மாகத் தெரியும். ஆனாலும், படம் பார்க்கும்போது பலருக்கும் பயம் வருகிறது.
திரையரங்கினுள் பேய் இல்லை என்று தெரிந்தாலும் பயப்படுவதற்குக் காரணம் தெரியுமா? சின்ன வயதில் இருந்து பேய் பற்றி கற்பிக்கப்பட்ட நம்பிக்கைகளும் மரணம் பற்றிய அச்சமும்தான்.
திரையில் காணப்படும் பேய் உண்மை இல்லை என்றாலும், பேய் இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக நம்புகிறான் மனிதன். தான் இதுவரை காணாத பேய் எப்படியிருக்கும் என்பதை அறிந்து கொள்ளும் ஆவலில்தான், பேய்ப்படம் பார்க்கிறான் மனிதன். ஒரு பேய் படத்தைப் பார்த்து முடித்ததும், ஏதோ சாதனை புரிந்ததுபோல் சந்தோஷப்படுகிறான். இன்னும் சொல்லப் போனால் மது குடிப்பதில் கிடைக்கும் போதையைப் போன்று பேய் படம் பார்த்து, கொஞ்சம் இன்பமும், உள்ளூர கொஞ்சம் பயமும் அடைகிறான். படம் பார்ப்பதால் தன்னுடைய உயிருக்கு எந்த ஆபத்தும் வராது என்பது உறுதியாகத் தெரிவதால்தான் படம் பார்க்க முன்வருகிறான், அதேநேரம் பயப்படவும் செய்கிறான். இதுபோன்ற பயங்களுக்கான அடிப்படை மரணம் பற்றிய அச்சம் என்பதை விளக்குவதற்காக இந்த உண்மை சம்பவம்.
ஒரு கிராமத்துக்கு வெளியே இருந்த கிணற்றில் விழுந்து அடிக்கடி சிலர் தற்கொலை செய்துகொண்டார்கள். அதனால் உள்ளூர்க் காரர்கள் அந்தக் கிணற்றுத் தண்ணீரை பயன்படுத்துவதே இல்லை. ராத்திரி நேரங்களில் அந்தக் கிணற்றில் ஆவிகள் அழுதுபுலம்பும் சத்தம் கேட்பதாக பேச்சு உண்டு. அதனால் இரவு நேரங்களில் அந்தக் கிணற்றின் பக்கம் ஊர் மக்கள் யாரும் செல்வது இல்லை. இதை நம்பாமல் பகலில் அந்தக் கிணற்றில் குளித்த ஒருவன், சில வாரத்திலேயே எதிர்பாராதவிதமாக மரணத்தை தழுவினான். அதனால் அந்த ஊர் மக்களைப் பொறுத்தவரை அந்தக் கிணறு என்பது பேய்களின் கல்லற
இப்படிப்பட்ட நேரத்தில் இரண்டு நண்பர்கள் அந்தக் கிராமத்துக்கு புடவை வியாபாரம் செய்வதற்கு வந்தார்கள். வரும் வழியில் கிணற்றைப் பார்த்ததும் அவர்களுக்கு குளிக்கும் ஆசை வந்தது. இருவரும் உள்ளே இறங்கி சந்தோஷமாகக் குளித்து முடித்து வெளியே வந்தார்கள். கிணற்றை சுற்றி நின்று ஊர் மக்கள் ஆச்சர்யமாகப் பார்ப்பதைக் கண்டு நண்பர்கள் திகைத்தார்கள், காரணம் கேட்டார்கள். அப்போதுதான் பேய் விவகாரம் அவர்களுக்குத் தெரியவந்தது.
இருவரும் அதிர்ச்சி அடைந்தாலும் ஒருவன் உடனே சுதாரித்துக்கொண்டான். கிணற்றில் பேய் இருக்கிறது என்றால், உள்ளே குளித்ததும் என்னை பிடித்திருக்க வேண்டும், அப்படியெதுவும் நடக்கவில்லை என்று சிரித்தபடி சொன்னான். வேண்டுமென்றால் நான் இந்த ஊரிலேயே சில நாள்கள் தங்குகிறேன், எனக்கு எதுவும் நடக்கவில்லை என்பதைத் தெரிந்துகொண்டு நீங்களும் பேய் இல்லை என்ற முடிவுக்கு வாருங்கள் என்று சொன்னான்.
இன்னொரு நண்பனால் பேய் விவகாரத்தை அத்தனை எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. தேவையில்லாமல் ஆவியின் கோபத்துக்கு ஆளாகக்கூடாது என்று பயந்தான். உடனடியாக ஊருக்குத் திரும்பி ஆவியின் கோபத்தில் இருந்து தப்புவதற்காக பரிகாரம் செய்யப்போகிறேன் என்று கிளம்பிவிட்டான்.
ஊரில் தங்கியிருந்த நண்பனுக்கு நிச்சயம் ஆபத்து ஏற்படும் என்று ஊர் மக்கள் தினமும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டே இருந்தார்கள். ஆனால், அவன் எந்த சிக்கலும் இல்லாமல் நிம்மதியாக இருந்தான். ஒரு வாரம் கழிந்த நேரத்தில் ஊருக்கு அந்தத் தகவல் வந்து சேர்ந்தது. ஆம், பேய்க்காக பரிகார பூஜை செய்வதற்காக ஓடிப்போன நண்பன், திடீரென செத்துவிட்டான். ஆம், பரிகார பூஜை முடிந்த பிறகும் யாரோ அவனை அழைப்பதாகச் சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறான். அதனால் திடுமென தூக்குப்போட்டு செத்துவிட்டான்.
இப்போது ஒருவன் உயிருடன் இருந்தாலும், இன்னொருவன் செத்த காரணத்தால், அந்த பேய்க் கிணறு மீது மக்களுக்கு முன்பைவிட அதிக பயம் வந்துவிட்டது. அந்தக் கிணற்றுக்குப் போகும் பாதையை நிரந்தரமாகவே மூடிவிட்டார்கள். இப்போது ஓர் உண்மை புரிந்திருக்கும். பயந்தவனுக்கு மரணம் நிச்சயம்.