விஜய் கட்சியில் உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறதா? தீயாய் பரவும் படிவம் குறித்து தமிழக வெற்றிக் கழகம் விளக்கம்

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற பெயரில் புதிதாக அரசியல் கட்சி ஒன்றை தொடங்கி உள்ளார். அந்த கட்சி 2026ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடும் என்பதையும் திட்டவட்டமாக அறிவித்துள்ள விஜய், அதற்கு கட்சியை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட முடிவு செய்துள்ளார். அதன் ஒரு பகுதியாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை விரைவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே, விஜய்யின் கட்சியில் சேருவதற்கான படிவம் எனக் கூறி, சமூக வலைதளங்களில் ஒரு படிவம் வைரலாக பரவி வந்தது. இதைப்பார்த்து பலரும் அது உண்மை என நம்பி, ஷேர் செய்ய தொடங்கினர். ஆனால் பின்னர் தான் அது போலியான படிவம் என்பது தெரியவந்துள்ளது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இன்னும் உறுப்பினர் சேர்க்கை என்பது தொடங்கப்படவில்லையாம்.

விஜய் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முழுக்க முழுக்க செயலி மூலம் தான் நடைபெறும் என்பதை திட்டவட்டமாக அறிவித்துள்ள தமிழக வெற்றிக் கழகம், உறுப்பினர் சேர்க்கை படிவம் என்பது பொய்யானது என்பதையும் தெரிவித்துள்ளது. விரைவில் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. அதில் 2 கோடி பேரை சேர்க்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *