காப்பீட்டு திட்டங்களில் இப்படியொரு வசதி இருக்கா.. சரியாக பயன்படுத்தினால் டபுள் கொண்டாட்டம்..!
காப்பீடு திட்டங்கள் நமக்கும், நம்மை சார்ந்தவர்களின் எதிர்காலத்திற்கும் நன்மை தரக்கூடிய முதலீடுகள். காப்பீட்டை வீண் செலவாக எண்ணி தவிர்த்து விட முடியாது.
ஏனேனில் யாருக்கு எப்போது என்ன மாதிரியான பிரச்னைகளும் இழப்புகளும் ஏற்படுகின்றன என்பதை நம்மால் கணிக்கவே முடிவதில்லை. எனவே பாதுகாப்பு கருதி காப்பீடு திட்டங்களில் முதலீடு செய்வது புத்திசாலித்தனமானது, அதிலும் வருமான வரி சலுகைகள் கிடைக்கிறது என்பதால் நிச்சயமாக நீங்கள் பரிசீலிக்க வேண்டும். இதவேளையில் இத்தகைய இன்சூரன்ஸ் மூலம் ஒருவர் அதிகப்பட்சமாக எவ்வளவு வரி சேமிக்க முடியும் என்பதையும் தெரிந்துக்கொள்ளுங்கள் டெர்ம் பிளான்: மாரடைப்பு, விபத்து போன்றவற்றால் மக்கள் இறப்பது சாதாரணமாகி விட்டது. இப்படி ஏற்படும் திடீர் இறப்புகள் , அவர்கள் சார்ந்த குடும்பங்களை நிலை குலைய வைக்கின்றன. அப்போது கை கொடுத்து உதவுபவை தான் டெர்ம் பிளான்ஸ்.
வீட்டில் நீங்கள் ஒருவர் தான் வேலைக்கு சென்று சம்பாதிக்கிறீர்கள் என்றால் கட்டாயம் டெர்ம் பிளான் எடுத்துவிடுங்கள். இறப்பு பலனாக மற்ற காப்பீடுகளுடன் ஒப்பிடும் போது குறைந்த ப்ரீமியத்தில் கணிசமான தொகை கிடைக்கிறது. அதுமட்டுமின்றி டெர்ம் பிளான்களுக்கு ஆண்டு தோறும் செலுத்தும் ப்ரீமியங்களுக்கு வருமான வரி சலுகை கிடைக்கிறது. டெர்ம் பிளானில் வரி சேமிப்பு: வருமான வரி சட்டத்தின் 80சி பிரிவில் ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு கிடைக்கும். அதுமட்டுமின்றி இறப்பு பலனாக கிடைக்கும் தொகைக்கு வருமான வரி கிடையாது. சில டெர்ம் பிளான்கள், ரிட்டர்ன் ஆஃப் ப்ரீமியம் என்ற விருப்பத்தை கொண்டுள்ளன.
அதாவது குறிப்பிட்ட ஆண்டுகளை கடந்த பின், நீங்கள் செலுத்திய ப்ரீமியம் உங்களுக்கு கிடைக்கும். முதலீட்டுடன் கூடிய காப்பீடு திட்டம்: ஆயுள் காப்பீடு, நல்ல வருமானம் மற்றும் வரிச் சலுகை ஆகிய மூன்றும் கிடைக்கும் திட்டங்கள் தான் இவை. ஆயுள் காப்பீடு மட்டுமில்லாமல் யூலிப் எனப்படும் சந்தையுடன் இணைக்கபப்ட்ட திட்டங்கள் உங்கள் ப்ரீமியத்தை முதலீட்டாக்கி வருமானமும் தருகிறது. வரி சேமிப்பு: இந்த திட்டங்களில் செலுத்தும் ப்ரீமியம் தொகைக்கு வருமான வரி சட்டத்தின் 80 சி பிரிவின் கீழ் ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு கிடைக்கும். அதே போல இந்த திட்டங்களில் கிடைக்கும் வருமானத்திற்கு வரி கிடையாது.